வேட்டை நாய்களுடன் வந்தவன் மேலும் கூறலானான்... ஆத்மா என்பது உள்ளதாம் தன்மை (எங்கும் எக்காலத்தும்)உணர்வாம் தன்மை- ஆனந்தமாம் தன்மைஎன்று மூன்று இயல்புகளைக் கொண்டது. அது மாறுபடாதது... வேறுபடாது... கலங்காத-கலக்க முடியாத பெருங்கடல்,"ஸத் சித் ஆனந்தம்" (உண்மை - உணர்வு - பேரின்பம்) என ஆத்மாவின் நிலை அறுதியிடப்படுகிறது. இவை மூன்றும் ஆத்மாவின் தன்மைகள்...குணங்கள் என்று கொள்ளுதலும்...இவை ஒவ்வொன்றும் ஆத்மாவின் வெவ்வேறு இயல்புகள் என்று கொள்ளுதல் கூடாது. ஏனென்றால்... ஆத்மாவை இந்த குணங்கள் சிறப்பித்துக் காட்டி விளக்குவன அல்ல. ஆத்மாவே உள்ளதாம் - இயல்பும் உணர்வுமாவது. அதுவே ஆனந்தமாவது உள்ளதாம். தன்மையே உணர்வாவது...உணர்வாவதே பேரின்பம். ஆத்மாவிலோ... ஆத்மாவிற்கோ வேறுபாடு என்பது சிறிதளவும் கிடையாது. ஆத்மாவிற்கு ஒப்பானதும்... ஒப்பு ஆகாததும் என எதுவும் கிடையாது. ஆத்மா... பாகங்கள் பல கொண்ட ஒரு முழுமையும் அன்று. எப்போதும்... எல்லாவற்றிலும் ஒரே சீரான நிலையை உடைய ஒன்றேயானது. ஆத்தமாவைவிட வேறான இரண்டாவது எதுவுமே கிடையாது. அதற்கு எல்லை வரைமுறையோ... எல்லை வரையனைகளுக்கு உட்பட்டதோ அறவே இல்லை. ஆத்மா சிறிதும் கலங்காத (அலை பாய்ந்து அசையாத) கடல்.அதற்குக் கரையும் கிடையாது.இவ்வாறு இருக்க இந்த ஆத்மாவைப் பற்றிய சிறப்பும் வேறுமாகும் என எப்படிக் கூறப்படும்?உயர்ந்த படிப்பு... அதை உடையவன், தாழ்ந்த படிப்பு... அதை உடையவன் என்பது போன்ற பிரிவும், சிறப்பான வேறுபாடுகள்... ஆத்மாவிற்கு தொடர்புடையன ஆகுமா?ஆகவே எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்ததும்... பிரித்துக் காணமுடியாத ஆதார சாரமாயும் இருக்கும் பிரம்மத்திடம்...இம்மியளவு கூட வேறுபாட்டிற்கு இடம் கிடையாது. தோன்றும் வேறுபாடு எல்லாம் முக்கியமல்ல. உடல் போன்றவற்றைப் பற்றித்தான் தோன்றுகின்றன. இந்த வேறுபாடுகள் எல்லாவற்றிலும் ஆத்மாவில் ஒட்டி அதைப் பாதிப்பது என்று கிடையவே கிடையாது.ஞானம் மேலிட்டவனாய் இந்த வார்த்தைகளைக் கூறியவனைப் பார்த்த சங்கரருக்கு... உடன்... சிவபெருமான்தான் அந்த வடிவத்தில் வந்து உள்ளார் என்று புரிந்தது.குருவாகவும், சிஷ்யனாகவும்..பரமசத்தியான பிரம்மமே நடித்துக் காட்டிய நாடகமே இது.சங்கரர் தான் இயற்றியுள்ள தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் கூறும் "ஒன்றேயான பரமசத்தியம்தான் சீடன்-குரு.,மகன்-தந்தை., என வெவ்வேறு வடிவத்தில் தோன்றுகிறது" என்பதன் நாடக விளக்கம்.சங்கரர், "மனீஷா பஞ்சகம்" எனும் ஐந்து செய்யுள்களைக் கொண்ட நூலில், ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்ற பெரிய தத்துவத்தை உணர்த்தியுள்ளார்.இப்போது வேட்டை நாய்களுடன் வந்தவன்... உலகத் தலைவனான சிவபெருமானாக நின்றார். அவருடன் வந்திருந்த நாய்கள்... நான்கு வேத வேத வடிவத்தைப் பெற்று திகழ்ந்தன.சங்கரர் சிவபெருமானை வணங்கி பிரார்த்தனை செய்தார்."இறைவா! இந்த உடலை வைத்து பார்த்தால் நான் உனது தொண்டன். ஆத்மாவைக் கொண்டு பார்த்தால் நான் உனது அங்கமே! ஆதலால் முக்கண்ணனே... உலகில் அனைத்திற்கும் ஆத்மாவாக இருக்கும் சிவபெருமானே... உள்ளுணர்வைக் கொண்டு காணும் போது நீயே நான். இதுவே சாத்திரங்கள் அனைத்தின் துணையுடன் நான் செய்துள்ள முடிவான உண்மை" என்பதே சங்கரர் கூற்று.மகிழ்ச்சியுற்ற சிவன்...ஆன்மீக ஒருமைப்பாட்டை வெற்றி பெற சங்கரருக்கு நல்லாசி கூறி பணித்தார். அதன்படி இமயமலையை சேர்ந்த பதரிகாசிரமம் சென்று, வியாசரை தரிசனம் செய்து அவர் ஆசையையும் பெற்றார் சங்கரர்..இங்குதான் தன் பரம குருவான - அதாவது தன் குருவான கோவிந்தருக்கும் குருவான கௌடபாதரை தரிசனம் செய்தார். பின்,காசிக்கு திரும்பி வந்து விரிவுரைகளையும் மற்ற நூல்களையும் எழுதினார்.சம்பிரதாயம் அறிந்தவர்கள்...சங்கரர் முதலில் எழுதிய நூல் விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்றும், பிறகுதான் அத்வைத சித்தாந்தத்தின் அடிப்படையான பாஷ்யங்களை எழுதினார் என்றும் கூறுவர்.அவை: 1) உபநிசத்தின் விரிவுரை, 2) பகவத்கீதையின் பாஷ்யம், 3) பிரம்ம சூத்திரத்தின் பாஷ்யம் என்பன சங்கரர் பிரம்ம சூத்திரத்தை விரிவாக சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருநாள் வியாசரே ஒரு முதியவர் வேடத்தில் வந்து, சங்கரரிடம்... அத்வைத கொள்கைகளை சரியாக விளக்குமாறு கேட்டார்.வாதம் செய்ய வந்த வியாசருக்கும்...சங்கரருக்கும் இடையே பலநாட்கள் வாதப்போர் நிகழ்ந்தது.சங்கரரின் சீடரான பத்மபாதர்... கிழவர் வேடத்தில் வந்திருப்பது வியாசரே என்பதை அறிந்தார்.வியாசர், விஷ்ணுவின் அவதாரம்... சங்கரர், சிவபெருமானின் அவதாரம்...இவர்களிடையே வாதம் முடிந்து சமாதானம் ஏற்பட வாய்ப்பில்லை என நினைத்து, இருவரையும் வணங்கி... வாத-பிரதிவாதத்தை முடித்துக் கொள்ளச் சொன்னார்.வியாசரும்...தான் யார் என்பதை வெளியிட்டுவிட்டு வாதம் செய்வதை நிறுத்திவிட்டு, சங்கரருக்கு ஆசி கூறி வாழ்த்தினார். சங்கரர் செய்த உரை ‘சரி’ என்றும் ஒப்புக் கொண்டார். பின், பதினாறாக இருந்த சங்கரரின் ஆயுளை இரு மடங்காக்கி வரம் செய்தார்.பின் , பாரத தேசம் முழுதும் விஜயம் செய்து வேதாந்த உபதேசத்தை செய்து மக்களிடையே உண்மையான தத்துவ ஞானம் பரவ செய்ய வேண்டும் என்றும் சொல்லி அருளினார்.சங்கரர் காசியில் இருந்த போது ஒருநாள் தன் சீடர்களுடன் சென்ற போது வயதான ஒருவர் வடமொழி இலக்கணச் சூத்திரங்களை கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்வதைக் கண்டார். அந்த முதியவரிடம் சங்கரருக்கு கருணை உண்டானது. உடன் அவரிடம், "கிடைத்தற்கரிய மனிதப் பிறவியும், அறிவும், நாக்கும் மற்ற புலன்களும் பெற்றுள்ள நீங்கள் ஏன் வாழ்நாளை இப்படிக் கழித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இறைவனை... கோவிந்தனை...அவனது திருநாமங்களைச் சொல்லி..பிறவிப் பயனை அடையலாமே" என்றார்.அப்போது இயற்றியதுதான் "பஜ கோவிந்தம்".(கண்ணன் நினைவைப் போற்றி) என்னும் 12 கண்ணிகள் அடங்கிய சிறுநூல் ஆகும். பின் சங்கரருடன் சென்ற பதினான்கு சீடர்களும் ஆளுக்கு ஒரு கண்ணியைப் பாடிக் கொடுத்தனர்.(இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்)"கோவிந்தன் நினைவைப் போற்று" எனும் பல்லவியைக் கொண்ட அந்தப் பாடல்களால் கண்ணனையோ... அதே பெயருள்ள சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதரை போற்றித் துதி பாட மட்டுமின்று... இந்நூல் அத்வைத வேதாந்தத்தின் சாரமான பொருளைக் கூறும் ஒரு குறிப்புப் புத்தகம் போன்றதாகும்.இந்நூல் அத்வைதம் கற்க விரும்பும் சீடன் ஒருவன் அந்தத் தத்துவத்தை உணர்ந்து கொள்ள இன்றியமையாமல் அறிய வேண்டிய சாரமான பொருளை சங்கரர் கூறுகிறார்.நிலையாத பொருள்கள் மீது ஏற்படும் ஆசையை விட்டொழித்தல் வேண்டும்.வாழ்க்கை,செல்வம், குடும்ப பந்தம்,மக்கள் மீது கொள்ளும் பாசம் போன்றவற்றின் தன்மை... தோன்றி இருந்து மறையும் மாயம் என்பதை சிந்தித்து உணர்தல் வேண்டும்.பேராசையும், கர்வமும் போன்ற தீய குணங்களை விரட்டி வெற்றி பெறுதல் வேண்டும்.உள்ளதைக் கொண்டும்... கிடைத்ததைக் கொண்டும் திருப்தி அடைதல், அனைவரையும், அனைத்தையும் சரிநிகர் சமானமாகக் கருதுதல், தூய நம்பிக்கை போன்றவற்றை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.இந்த உலகம் ஜால வித்தைக்காரன் காட்டும் மாயாஜால வேடிக்கை போன்றது. ‘ஆத்மா’ என்ற ஒன்றே சாத்தியமானது என்பதை புரிந்து உணர்தல் வேண்டும்.இலக்கணம் படித்தே வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டுள்ள மனிதனைப் பார்த்து சங்கரர் கூறுகிறார்..."கோவிந்தனைப் போற்று. அழியும் பொருள்களில் பற்றுக் கொள்வது வீடுபேற்றுக்கு வழி வகுக்காது. அழியாத பொருளைப் போற்றி வழிபடுவதுதான் வீடு பேற்றிற்கு வழியாகும். நிலையாத பொருள்கள் நம்மைக் காக்கும் என நினைப்பது பேதமை, அப்படி நினைப்பவன் மனம் மோகத்தால் ஏமாறிப் போனதாகும். அவன் அறிவில்லாத மூடன். மேலும் “கடவுளிடம் பக்தி செய்வதும்... அவன் நாமங்களைக் கூறுவதும் இப்போதைக்கு வேண்டாம். பின்னால் பார்த்துக் கொள்வோம்” என்று ஒத்திப் போடுவதும் பெரும் ஏமாற்றத்தையே விளைவிக்கும். ஏனென்றால் மரணம் வரும் நேரத்தில் யாராலும் தன் மனத்தை கடவுளிடம் திடீரென செலுத்த முடியாது. மரணக் காலத்தில் இறைவன் நினைவு வரவேண்டுமென்றால்... நம் மனதை அடிக்கடி கடவுளை நினைத்து...நினைத்துப் பயிற்றிப் பழகி இருக்க வேண்டும். கடவுளை வணங்கி வழிபட்டு... அது வழக்கமாகி இருக்க வேண்டும். வீடு பேற்றுக்கான பயிற்சிகளைப் படிப்படியாக பெற வேண்டும்..." என்று கூறும் சங்கரர் மேலும் கூறுகிறார்."ஞானிகளான நல்லோருடன் இணங்கிப் பழகுவது பற்றின்மையைத் தரும். பற்றின்மை மூலமாக “மோகம்” எனப்படும் ஏமாற்றம், அறியாமை தந்த மயக்கம், நீங்கும் மாயமான மோகம் நீங்குதல் மூலம் தியான சித்தம்... அதாவது சஞ்சலம் அடையாத நிலை ஏற்படும். அது ஏற்படுவதால்...ஜீவன் முக்தியை அடையும். உயிருடன் வாழும் காலத்திலேயே சோகமும்,மோகமும் இல்லாதபடி பரமானந்தத்தை அனுபவிப்பதே ஜீவன் முக்தி எனப்படுவது."(தொடரும்)