அந்த நேரத்தில் இந்தக் கோயிலில் ஆண்களுக்கு அனுமதியில்லை!

காமாக்யா கோவில்...
காமாக்யா கோவில்...

ந்தியாவில் எத்தனையோ அதிசயமான, ஆச்சரியமான கோவில்களை பார்த்திருந்தாலும் சில கோவில்கள் மட்டும் தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அதைப் பற்றிய விஷயங்களை கேட்கும்போது மலைப்பாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கோவிலை பற்றிதான் இன்று பார்க்க போகிறோம்.

காமாக்யா கோவில் அசாம் மாநிலத்திலுள்ள கௌஹாத்தியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாச்சல் மலையில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தாந்திரிக வேலைகள் செய்பவர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வருடாவருடம் ‘அம்புபாச்சி மேளா' காமாக்யாவின் மாதவிலக்கை பண்டிகையாக கொண்டாடுவார்கள். இக்கோவில் 8-9 நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என்றும் பலமுறை திரும்பவும் கட்டப்பட்டு கடைசியாக ஊள்ளுர் கட்டிடக்கலை பாணியான நிலாச்சலில் கட்டப் பட்டிருக்கிறது. இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இக்கோவிலுக்குச் சென்று காமாக்யாவை வணங்கினால் பில்லி, சூன்யம் போன்றவை விலகும் என்று நம்பப்படுகிறது.  இக்கோவிவில் பத்து விதமான வடிவத்தில் காளி தேவி இருக்கிறாள் என்றும் பத்து மஹாவித்யா கெட்ட சக்திகளை விரட்டியடிப்பார் என்றும் நம்பப்படுகிறது.

குழந்தை வரம் வேண்டுவோர் இக்கோவிலுக்கு வந்து காமாக்யாவை வணங்கி சென்றால் குழந்தைப்பேறு கிட்டும் என்று கூறப்படுகிறது. சதி தேவி இறந்த பிறகு அவர் உடலை வைத்துக்கொண்டு சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய பொழுது சதியின் யோனி வந்து விழுந்த இடம்தான் இது என்று கூறப்படுகிறது.

அம்புபாச்சி மேளா நிகழும் பொழுது, கோவிலை ஜூன்-ஜூலை மாதத்தில் மூன்று நாட்களுக்கு மூடி வைத்துவிடுவார்கள். அந்த சமயத்தில் ஆண்களுக்கு கோவிலில் நுழைவதற்கு அனுமதி கிடையாது. அச்சமயம் காமாக்யா தேவிக்கு மாதவிலக்கு ஏற்படுவதால் பெண் பூசாரிகளுக்கு மட்டுமே கருவறையில் அனுமதியுண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சமயம் காமாக்யா தேவிக்கு மாதவிலக்கு ஏற்படுவதால் கருவறையிலிருந்து வரும் ஓடை சிவப்பு நிறமாக மாறும் என்று கூறப்படுகிறது. எனினும் இதற்கு விஞ்ஞானபூர்வமாக விளக்கத்தை தேடினால், அங்கேயிருக்கும் மண்ணில் இயற்கையாகவே அதிகமாக இரும்புசத்து இருப்பதால் ரத்த சிவப்பு நிறம் உருவாகிறது என்றும் அதுமட்டுமில்லாமல் காமாக்யா கோவில் இருக்கும் மலையில் மெர்க்குரி சல்ப்பேட் அதிகமாக உள்ளதால் சிவப்பு நிறம் தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
‘உணவே மருந்து’ – எப்படி தெரியுமா?
காமாக்யா கோவில்...

உலகில் உயிர்கள் தோன்றிய காரணமாக காமாக்யா கருதப்படுகிறது. அம்புபாச்சி மேளாவின் போது ஆயிரக்கணக்கான தந்திரிகள் இக்கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிசய கோவில்களுக்கு பஞ்சமில்லை என்றாலும் இதுபோன்ற தனித்துவமான கோவில்களை பற்றிக் கேள்விப்படும் பொழுது சென்று தரிசித்துவிட்டு வர வேண்டும் என்ற ஆவல் தோன்றத்தான் செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com