திருவொற்றியூர் வடியுடையம்மன் கோவிலில் திருத்தேரோட்டம்!

தேர் இழுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!
திருவொற்றியூர் வடியுடையம்மன்  கோவிலில் திருத்தேரோட்டம்!

உலக பிரசித்தி பெற்ற 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி வடிவுடையம்மன் கோவிலில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. 47 அடி உயரமுள்ள மரத் தேரில் சந்திரசேகரனுடன் அம்பாள் திரிபுரசுந்தரி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் . தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இந்த விழாவில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வில் பங்கேற்றார் . திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோவிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். 

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 6ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் சுந்தர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா பத்து நாள் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறுகிறது. இந்த விழா நடைபெறுவதற்கு புராண நிகழ்வுகள் உள்ளது. திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி இருந்தது . திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 108 சங்க நாதங்கள் முழங்க பரிவர்த்தனைகளுடன் கலச பூஜைகளுடன் வாத்தியங்கள் ஒலிக்க வெகு விமரிசையாக கொடியேற்றதுடன் துவங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 3-ந்தேதி இரவு 7.30 மணிக்கு சந்திரசேகர சுவாமி புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.


மாசி உற்சவம் மார்ச் 6 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் உற்சவர் தியாகராஜர் , சூரிய பிரபை, சந்திர பிரபை, நாகவாகனம், அதிகாரநந்தி யானை வாகனம் என தினந்தோரும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் குழந்தை ஈஸ்வரர் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், இரவில் தியாகராஜசுவாமி மாடவீதி உற்சவமும் நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com