பிரசாதம் அனுப்பி கண்பார்வை தந்த பாபா!

பிரசாதம் அனுப்பி கண்பார்வை தந்த பாபா!

னது தோழி ஒருத்தியின் கணவருக்கு ஒரு கண்ணில் புரை வந்து ஆபரேஷன் செய்தார்கள். ஆபரேஷன் முடிந்த பிறகு, ‘கண்ணைத் திறந்து நன்றாகப் பார்க்க முடிகிறதா?’ என்றபோது, ‘இருட்டாக இருக்கிறது’ என்றார் அவர். பிறகு லேசாக பார்வை தெரிய, சிறிது நாள் கழித்து இரண்டாவது முறை ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். அப்பொழுதும் ஆபரேஷனில் கண் பிரச்னையை தீர்க்க முடியாத நிலை. அது மிகவும் பிரபலமான கண் மருத்துவமனை என்பதால் மூன்றாவது முறையாக கண்ணில் ஆபரேஷன் செய்தபோது மூடி இருந்த கண்ணை பிரித்து எடுக்கும்பொழுது கண்ணின் விழித்திரை அப்படியே பிய்த்துக் கொண்டு கையோடு வந்துவிட்டது. ஆதலால், அந்தக் கண் வெள்ளையாகி பார்வை சுத்தமாகப் போய்விட்டது. இதனால் அவர் பார்த்துக் கொண்டிருந்த பணியை விட வேண்டியதாயிற்று. பிறகு வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு வீட்டில் இருந்தார்.

அடுத்தபடியாக, இரண்டாவது கண்ணிலும் புரை வளர டாக்டரிடம் செல்லவே பயந்து கொண்டு வேறு வழி இல்லாமல் சென்றிருக்கிறார்கள். அதற்கு வேண்டிய மருந்துகளை அளித்து உரிய டெஸ்ட் எல்லாம் செய்து ஆபரேஷனுக்கு நாள் குறித்த பொழுது, அவர்கள் வீடே ஒருவித பதற்றத்தில் இருந்தது. என் தோழியோ, பாபா கோயில்களுக்குச் செல்வது, அந்த உதியை வாங்கி வந்து அவருக்குப் பூசி விடுவது, பாபா பஜன்களைப் பாடுவது என்று ஒருவித பக்தி நிலையில் இருந்தார்.

என் தோழியின் கணவர் கிட்டத்தட்ட பேசுவதையே நிறுத்திவிட்டார் பயத்தில். ஆபரேஷன் ஆவதற்கு முதல் நாள் அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்த ஒருவர் ‘நேற்று நான் ஷீரடி பாபாவை தரிசிக்க போயிருந்தேன். ஷீரடியிலிருந்து சாய் சரிதம் புத்தகம், உதி, கயிறு எல்லாம் வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்தேன். ஆனால், என்னவோ தெரியவில்லை, வந்ததிலிருந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. ஆதலால் ஜெனரல் காம்பார்ட்மெண்ட்டில் ஏறி இங்கு வந்து விட்டேன். எல்லாரும் நன்றாகத்தானே இருக்கிறீர்கள்? வேறொன்றும் பிரச்னை இல்லையே?’ என்று கேட்க, அப்பொழுதுதான் தோழியின் கணவர், நாளை ஆபரேஷன் நடக்கவிருப்பதை கூறி இருக்கிறார் அவரிடம்.

‘சரி ஒன்றும் பயப்படாதீர்கள். அந்த சாய்பாபாதான் என்னைத் தூங்க விடாமல் உங்களிடம் இந்தப் பிரசாதங்களை கொடுக்கும்படி அனுப்பி இருக்கிறார். ஆதலால் இந்த உதியைப் பூசிக் கொள்ளுங்கள். கருப்பு கயிற்றை கையில் அணிந்து கொள்ளுங்கள். ஆபரேஷன் நல்லபடியாக முடியும். எந்தவித பிரச்னையும் இருக்காது’ என்று ஆறுதல் கூறியதோடு, ஆபரேஷன் முடியும் வரை அங்கேயே இருந்தார். அபரேஷன் முடிந்து, ‘நன்றாகப் பார்க்க முடிகிறது, கண் நன்றாகத் தெரிகிறது’ என்று அவர் கூறிய பிறகுதான், அவரின் நண்பர் புறப்பட்டு மும்பைச் சென்று இருக்கிறார்.

பக்தர்கள் உள்ளம் உருகி செய்யும் பிரார்த்தனைக்கு பாபா செவிமடுக்க மாட்டாரா என்ன? பாபாவை பணிவோம்! அவரின் கருணையை பெறுவோம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com