திருமணக் குழப்பம் தீர்த்த பாபா!

திருமணக் குழப்பம் தீர்த்த பாபா!

ன் தோழியின் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு, பெண்ணுக்குப் பொருத்தமான இரண்டு ஜாதகங்களை தரகர் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். இரண்டும் பெண்ணின் ஜாதகத்தோடு மிகவும் பொருந்தி போகவே, யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரை நிராகரிப்பது என்ற கேள்வி எழுந்தது. உடனே மகளிடம் போட்டோ மற்றும் அவர்களின் ப்ரொபைலை காண்பித்து, ‘உன் மனதுக்குப் பிடித்தமானவரை கூறு’ என்று என் தோழி கேட்க, மகளோ ‘மாப்பிள்ளை பார்ப்பது என் வேலை இல்லம்மா. அது பெற்றோரின் கடமை. நீங்கள் இதில் யாரை திருமணம் செய்து கொள்ளச் சொன்னாலும் நான் செய்து கொள்கிறேன். நீங்களே தேர்ந்தெடுங்கள்’ என்று கூறிவிட்டாள்.

தோழிக்கு குழப்பம் நீங்கியது. உடனே இரண்டு துண்டு சீட்டை எடுத்தாள். அதில் இருவரின் பெயரையும் தனித்தனியாக எழுதினாள். இரண்டையும் ஒரு கைக்குட்டைக்குள் முடிந்து, அந்தக் கைக்குட்டையை இடுப்பில் சொருகிக் கொண்டு தன் இஷ்ட தெய்வமான மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபாவை தரிசிக்கச் சென்றிருக்கிறாள். அங்கு பாபா எதிரில் இந்தச் சீட்டுகளை குலுக்கிப் போட்டு, அங்கே இருக்கும் குழந்தைகளில் யாரையாவது ஒருவரை அழைத்து அந்தச் சீட்டில் ஒன்றை எடுக்கச் சொல்லுவோம். அதில் யார் பெயர் வருகிறதோ, அவருக்கே மணமுடித்து வைத்து விடலாம் என்ற தெளிவுடன் சாய்பாபா கோயிலுக்குள் நுழைந்திருக்கிறாள்.

கோயிலின் வெளியில் இருந்த குழாய்களில் கால்களை நனைத்து விட்டு, கைக்குட்டையை தேடினால் அது கிடைக்கவில்லை. புடைவையை நன்கு உதறிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை. எங்கேயோ விழுந்து விட்டது என்றெண்ணி கண்ணீர் வடித்திருக்கிறாள். ‘சரி இருக்கட்டும்… வந்தது வந்தோம், பாபாவை தரிசித்து விட்டு செல்லலாம்’ என்று பாபாவைச் சுற்றி வரும்போது, பாபாவுக்கு எதிராக அவள் புடைவையில் இருந்து அந்தக் கைக்குட்டை விழுந்திருக்கிறது. அதில் ஒரே ஒரு சீட்டு மட்டும் கீழே விழ, அதை அவளே எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, ‘மகேந்திரா’ என்று எழுதியிருந்தது. அந்த நேரத்தில் தத்தி தத்தி நடந்து வந்த ஒரு குழந்தையை, அதன் தாய் ‘மகேந்திரா, மெல்ல நட’ என்று கூறிக்கொண்டு குழந்தையைப் பிடிக்க வந்திருக்கிறார்.

இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ, தோழிக்கு தூக்கி வாரிப்போட, ஒரு நிமிடம் எதுவும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்று விட்டிருக்கிறாள். பிறகு நிதானத்துக்கு வந்து பாபாவுக்கு நன்றி கூறி, மீண்டும் ஒருமுறை வணங்கி விட்டு, தெளிந்த மனதுடன் வீட்டுக்கு வந்து நடந்ததைக் கூறி அந்த வரனையே மகளுக்குத் திருமணம் செய்து வைத்தாள்.

எத்தனையோ அற்புதங்களை நடத்தியவருக்கு இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்துவது பெரிய விஷயமா என்ன? அவருக்குத்தானே தெரியும். பக்தைக்கு நல்வழி காட்டுவது எப்படி என்று! சாய் பாபாவை பணிவோம்! பயமின்றி வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com