விளக்குகள் கொடுத்து அருள் வெளிச்சம் வழங்கிய பாபா!

விளக்குகள் கொடுத்து அருள் வெளிச்சம் வழங்கிய பாபா!

னது தோழி தீவிர சீரடி சாய்பாபா பக்தை. வருடா வருடம் அவளின் பிறந்த நாளன்று, யாராவது ஒருவர் பாபாவின் பிரசாதத்தை அவளின் வீடு தேடி வந்து கொடுத்து விட்டுச் செல்வார்கள். அதில் லட்டு, உதி, சாய் சரித புத்தகம், பாபா படம் போட்ட பேனா, சீரடியில் வாங்கிய கயிறு, திராட்சை, பேரிச்சைப்பழம் என்று ஏதாவது ஒன்றாக இருக்கும்.

அதுபோல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்  அவளின் பிறந்த நாளின் அந்தி வேளையில் ஒரு இளம் பெண், தோழி காரின் பின்புறம் சாய்பாபா படம் ஒட்டப்பட்டிருந்ததைக் கவனித்து, அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி, "ஏம்மா, நீங்க சாய்பாபாவின் பக்தைதானே என்று கேட்டு இரண்டு பித்தளை விளக்குகளை பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதை வாங்கிய என் தோழிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஏதோ சாய்பாபாவே அந்த விளக்கை ஏற்றி வழிபடுமாறு கொடுத்திருக்கிறார் என்று எண்ணியவள், அந்த விளக்கை பூஜை அறையில் வைத்து தீபமேற்றி ஏற்றி வழிபடத் தொடங்கி இருக்கிறாள். அதுவரையில் அவளின் மகனுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது. இந்த தீப வழிபாட்டுக்குப் பின்னர் அவர்களுக்கு மகப்பேறு கிட்ட, எனது தோழி மேலும் பாபாவின் தீவிர பக்தையாகிப் போனாள்.

சிறிது நாட்களில் பேரன் சகிதமாக குடும்பத்துடன் சீரடி சென்று பாபாவை வழிபட்டு திரும்பி உள்ளனர். ’’அந்த விளக்கு ஒளிரும்போதெல்லாம் அதில் பாபாவின் திருமுகம் மிளிர்வது போல்  நான் உணர்கிறேன்" என்று பக்திப் பரவசம் ததும்ப கூறுகிறாள் எனது தோழி. தனது பக்தைக்கு எந்த நேரத்தில் எந்தப் பொருளை பரிசாக வழங்க வேண்டும் என்பதை  தீர்மானிக்கத் தெரிந்தவர் அவரல்லவா பாபா! நம்பிக்கையுடன் பாபாவைப் பணிவோம்; அவர் இருளைப் போக்கி ஒளியை அருள்வார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com