துளசிச் செடி முன் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்! ஆனால் இந்த ஒரு நாள் மட்டும்..!

Basil Plant
Basil PlantImg Credit: Pinterest
Published on

துளசிச் செடியானது பாரம்பரிய கலாச்சாரத்தின் படி மிகவும் தூய்மையானதாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. செடிகளிலேயே துளசிக்கு மட்டும் தான் அதிக மரியாதை கிடைக்கிறது. இதனாலேயே துளசியின் முன் தீபம் ஏற்றுவதும் வழிபடுவதும் மரபாக உள்ளது. இதைச் செய்வதன் மூலம் ஒருவர் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவார் என்று நம்பப்படுகிறது. தினமும் துளசிக்கு அருகில் தீபம் ஏற்றுவதால் பல நற்பலன்கள் கிடைக்கின்றன.

பாரம்பரியமாக துளசி செடிக்கு அருகில் தினமும் காலை மற்றும் மாலையில் தீபம் ஏற்றும் வழக்கம் பலரிடமும் உள்ளது. பெரும்பாலானோர் துளசிக்கு முன்னால் எண்ணெய் தீபம் ஏற்றுகிறார்கள். எண்ணெய் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக, துளசிக்கு முன்னால் நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. துளசியின் முன் நெய் தீபம் ஏற்றினால் தூய்மை காக்கும் என்பது நம்பிக்கை. துளசிக்கு முன்னால் நெய் தீபம் ஏற்றினால் மஹாவிஷ்ணு அந்த வீட்டில் வாசம் செய்வார் என்பதும் நம்பிக்கை.

துளசியின் முன் தீபம் ஏற்றினால்.... 

  • வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை போக்ககிறது.

  • துளசி செடிக்கு அருகில் நெய் தீபம் ஏற்றினால் வீட்டின் இருள் நீங்கும். இதனால் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள். இது உங்கள் வீட்டில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குகிறது. உங்களை செல்வ செழிப்புடன் வாழவும் வைக்கிறது.

  • துளசி செடியின் வாசம் அங்குள்ள தீய எண்ணங்களை விரட்டி, நல்ல எண்ணங்களை நிலை நிறுத்துகிறது. இதனால் கெட்ட அதிர்வுகளை விரட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
துளசி செடியாக மாறிய பிருந்தா - இதன் பின்னணிதான் என்ன?
Basil Plant

சாஸ்திரத்தின்படி, துளசி செடிக்கு அருகில் தீபம் ஏற்றுவது அதிகாலையில் மட்டுமின்றி அந்தி சாயும் நேரத்திலும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, துளசி செடிக்கு அருகில் தீபம் ஏற்றினால், குடும்பத்தில் உள்ள அனைத்து நிதி பிரச்சனைகளும் தீரும். பண வரவு அதிகரிக்கும். கணவன் மனைவியிடம் ஒரு பிணைப்பு ஏற்படும்.

பாரம்பரியப்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் துளசியின் முன் தீபம் ஏற்றலாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் துளசி செடியின் முன் தீபம் ஏற்றக்கூடாது . மேலும் இந்நாளில் துளசி இலைகளைக் கூட பறிக்கக் கூடாது . அதற்கு பதிலாக, இந்த நாளில் தரையில் கிடக்கும் துளசி இலைகளைப் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com