இன்று தேய்பிறை அஷ்டமி (அக்டோபர் 24) வாராஹியை வழிபட்டு வரங்களை அள்ளுங்க!

Benefits of worshiping Goddess Varahi
Varahi amman
Published on

பெண் தெய்வங்களை வழிபட நம்முடைய கஷ்டங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமியான இன்று வாராஹி அம்மனை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

வாராஹி அம்மன் அன்னை துர்கா தேவியின் ஒரு அம்சமாவார். ஒரு சமயம் ரத்த பீஜன் என்ற அரக்கனுடன் மகா துர்காதேவி போரிட்ட பொழுது, தன்னிடமுள்ள மகாசக்தியை ஏழு பாகங்களாக பிரித்து, ஏழு சப்த கன்னியர்களை தோற்றுவித்து, அவர்களை ரத்த பீஜனுடன் போர் செய்ய அனுப்பியதாக புராணங்கள் கூறுகின்றன. அதே போன்று திருமால் வராக அவதாரம் எடுத்தபொழுது, அவரின் துணை அவதார சக்தியாக லட்சுமி தாயார் எடுத்த வடிவம்தான் வராகி அம்மன் வடிவம் ஆகும்.

ஓம் வாம் வாராஹி நம

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம

எனும் வராகி அம்மனுக்குரிய இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி, 108 முறை துதித்து வருபவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைத்து வறுமை ஒழியும். காரிய தடைகள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் கவசமாக இந்த மந்திரம் உள்ளது.

வாராஹியை வழிபட சிறப்பு தினம் பஞ்சமி. இது மாதம் இருமுறை வரும். அபூர்வமாக 3 முறை வரும். பௌர்ணமிக்குப் பிறகு ஒரு பஞ்சமியும், அமாவாசைக்குப் பிறகு ஒன்றுமாக வரும். இரண்டு பஞ்சமியில் வழிபட்டாலும் பலன்கள் வேறுபடாது தவறும் கிடையாது.

ஒரு வழிபாடு என்பது வெறும் வழிபாடாக இல்லாமல் நம் உடலோடும் இந்தப் பிரபஞ்ச சக்தியோடும் இணைந்த ஒரு ஆற்றல் சக்தியாக மாறும்போதுதான் அதில் இருந்து ஒரு பலனைக் கண்டிப்பாக பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
கோவிலில் மணி அடிப்பதில் உள்ள வரலாறு தெரிந்து கொள்வோமா?
Benefits of worshiping Goddess Varahi

நம் உடலும், இந்த உலகமும் பஞ்சபூதங்களால்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. இந்தப் பிரபஞ்சத்தோடு நாம் தொடர்பில் இருக்கும்போது நம் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஞானியர்கள் சொன்ன கருத்து. 5வது நாளில் இதை நாம் ஒன்றிணைக்கும்போது அது அதீத சக்தியாக மாறுகிறது.

அதனால்தான் பஞ்சமி என்ற இந்த நாளில் நம்மைக் காக்கக்கூடிய வாராஹி தெய்வத்தை வழிபாடு பண்ண வேண்டும். அதன்மூலம் உடல் சார்ந்த பிரச்னைகளும், நம் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

பஞ்சமி நாளில் கோவில், வீடு என்றில்லாமல் எங்கும் வாராஹி அம்மனைக் கும்பிடலாம். வாராஹி விக்கிரகம் இருந்தால் அதை வைத்து வழிபடலாம். இல்லை என்றால் சாதாரண அகல்விளக்கு ஏற்றி வழிபட்டாலே பலன்கள் ஏராளம்

அந்தத் தீபத்தில் வாராஹி வந்து எழுந்தருளி அருள்புரிய வேண்டுமென்று உள்ளன்போடு வேண்டிக் கொள்ளுங்கள். சிவப்பு, நீலம், வெள்ளை நிற மலர்கள், மரிக்கொழுந்து ஆகியவற்றைப் பயன்படுத்தி வழிபடலாம். குங்கும அர்ச்சனை செய்து வாராஹி மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. பஞ்சமி திதியில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நலம். நமக்கு ஏற்படும் பிரச்னைகள், தீய எண்ணங்கள் விலகும். வறுமை நீங்கும். வாழ்க்கையில் நல்ல ஒரு செல்வ நிலை வரும். நம் உடல், மனம் தூய்மையாகும். நாம் நம்மை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்த்தாலே போதும். நம்மை நெருங்கும் எதிர்வினைகள் அகன்று விடும்.

5 பஞ்சமிகள் நாம் தொடர்ந்து செய்வது விசேஷமானது. இந்த அதிசக்தி வாய்ந்த வழிபாட்டின் மூலம் நம் மனதில் ஒரு தெளிவும் தைரியமும் பிறக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com