மதுரை சித்திரை திருவிழாவில் பிச்சாண்டி சுவாமி ஊர்வலம்!

மதுரை சித்திரை திருவிழாவில்  பிச்சாண்டி சுவாமி ஊர்வலம்!
Published on

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று நான்கு மாசி வீதிகளில் வழியாக ஊர்வலமாக வரும் பிச்சாண்டி சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2 ஆம்தேதியும் மே 3ஆம் தேதி தேரோட்டமும் நடக்க உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான இன்று தங்க சப்பரத்தில் பிட்சாடன கோலத்தில் பிச்சாண்டி சுவாமி வீதி உலா வந்தார்.

இறைவனை மறந்த ரிஷிகளுக்கும், ரிஷிபத்தினிகளுக்கும் உணர்த்தும் வண்ணம் பிச்சாண்டி சுவாமி பிச்சை பாத்திரம் ஏந்தி ஊர்வலமாக வலம் வருவார்.

Madurai
Madurai

நான்கு மாசி வீதிகளில் வழியாக ஊர்வலமாக வரும் பிச்சாண்டி சுவாமிக்கு பொதுமக்களும் பிச்சையளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் மீனாட்சி சுந்தரேசுவரர் நண்பகல் 12 மணிக்கு சிவகங்கை ராஜா மண்டபப்படி,

மீனாட்சி நாயக்கர் மண்டபங்களில் எழுந்தளினார். அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் நந்திகேஸ்வரர் – யாளி வாகனத்தில் நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி உலா வந்து இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com