பூலோக வைகுண்டம்!

பூலோக வைகுண்டம்!

வைகுண்ட ஏகாதசி ஜனவரி 2, 2023

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் போது, மூலவருக்கு முழுவதும் முத்துக்களால் ஆன அங்கியும், உற்சவருக்கு ரத்தினங்களால் ஆன அங்கியும் அணிவிக்கப்படுகிறது.

முத்துக்கள், ரத்தினங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடலில் படும்போது உயிர் சக்தி வலுப்பெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி ராப்பத்து 7ஆம் நாளில் எம்பெருமான் திருக்கைத்தல சேவை நடைபெறும். மேலும் அன்று நம்மாழ்வார் பராங்குச நாயகியான கோலத்தில் சேவை சாதிப்பார்.

வ்வொரு ஏகாதசிக்கும் ஒரு விசேஷ பலன் உண்டு என்றாலும், மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்றுதான் வைகுண்டத்தின் பரமபத வாசல் திறக்கப்படும் என்பதால், வைகுண்ட ஏகாதசி எனவும், மோட்ச ஏகாதசி எனவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியின் போது பெருமாளுக்கு சம்பார் தோசை எனப்படும் பெரிய தோசையும், செல்வரப்பம் எனும் அரிசிமாவு தட்டையும், அமுது செய்யப்படும். நிறைவு நாளான நம்மாழ்வார் மோட்சத்தன்று கடினமான 'கேலிச் சீடை' எனும் தின்பண்டத்தை பெருமாள் அமுத செய்ததும், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

ஸ்ரீரங்கம் கோயிலை முஸ்லீம் மன்னர்கள் முற்றுகை யிட்டபோது ரங்கநாதரின் சிலையை டெல்லி பாதுஷா எடுத்துச் சென்றார். அவரது மகள் அந்த சிலையை அன்புடனும், பக்தியுடன் போற்றி எப்போதும் பிரியாமல் இருந்தாள். பல ஆண்டுகள் கழித்து அந்த சிலை ஸ்ரீரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, பிரிய முடியாமல் இளவரசியும் ஸ்ரீரங்கத்துக்கு வந்து விட்டாள். பிறகு ரங்கநாதருடன் அவள் ஐக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருநாள் ஆகும். அவளுக்காக பெருமாள் ஒரு நாள் லுங்கி உடுத்துகிறார். துலுக்க நாச்சியாருக்கு வெண்ணையும் கீரையும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com