

எல்லாம் கரெக்ட்டாத்தான் போகும்.. அந்த மூக்கு இருக்கு பாருங்க மூக்கு.. அதன் மேல் கோபம் என்னும் சமாசாரம் மட்டும் அடிக்கடி வந்து சிம்மாசனமிடாமல் இருந்தால் போதும். நான் பெரிய ஆள்.. என்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற நினைப்பு கடுகு சைஸ்லகூட உங்களின் மனதில் உட்காராமல் ஈ ஓட்டுவதுபோல் அவ்வப்போது விரட்டுங்கள்.
கடந்த ஆண்டுகளைவிடவும் இந்த வருடம் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். கடைசியில் வெற்றிகரமான ரிசல்ட் உண்டு என்பதுதானே முக்கியம். அந்த வெற்றிச் சிரிப்பில் உங்களின் அலைச்சலையெல்லாம் மறந்து நடனம்கூட ஆடத் தோன்றும்.
சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். குடும்ப ஒற்றுமைக்குக் கொஞ்சம் அதிக முயற்சிகள் எடுக்கவேண்டிய கால கட்டம் வருடக்கடைசியில் ஏற்படலாம். அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் காலம் இந்த ஆண்டின் துவக்கம் முதலே ஆரம்பமாகிவிட்டது. கடந்த ஆண்டு சித்திரை வைகாசியில் மனம் நொந்து இறைவனை வேண்டியதெல்லாம் இந்த ஆண்டு கைமேல் பலனாக, மனதின்மேல் சந்தோஷமாகக் கனிந்துவிட்டதே.
இத்தனை காலமாக எதைப் பேசினாலும் வில்லங்கத்தில் முடிந்ததுதானே? இனி என்ன பேசினாலும் அதைக் காவியமாய் நினைப்பார்கள். கொண்டாடுவார்கள். இனியும் அப்படி இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் நன்கு யோசித்துவிட்டுப் பிறகு வாயைத் திறப்பீர்கள். வெரிகுட். அதுதான் உங்களை உயர்த்தப்போகிறது. ஆனாலும் உங்களுக்கே உரித்தான அந்தப் பிரபல கோபத்தைக் கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போக மாட்டீர்கள் என்பது அரதப் பழசான பழமொழிதான். ஆனா அது இப்போது அதைப் புரிந்துகொண்டு செயல்பட்டு திடீரென்று எல்லோரையும் வியக்க வைப்பீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் மனதில் சிறு குழப்பம் ஏற்படக்கூடும். ஆனால் ஒன்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழப்பங்கள் எல்லாம் கற்பனை பயங்களே. இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்று தேவையில்லாமல் யோசிக்காதீர்கள். எப்படியும் ஆகாது. எல்லாம் நன்றாகவே ஆகும். ஏழரைச் சனியைக்கூட மங்களம் பாடி அனுப்பிவிட்டீர்கள். இன்னும் என்ன இருக்கிறது பயப்படுவதற்கு? ஆனால் ஒன்று நிச்சயம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மேலதிகாரியின் கருணைப் பார்வையால் சம்பளம் உயருவதோடு, சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது என்றைக்கோ போட்டுவைத்த பணம்.. நிறைய வட்டியோடு வரலாம். அல்லது கொடுத்துவிட்டு, வரவே வராது என்று நினைத்த தொகை வட்டியோடு வரலாம். சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். பெண்களுக்குப் பிறந்த வீட்டு அன்பு மீண்டும் கிடைக்கும்.
உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்பு பாராட்டுவார்கள். எதிரிகள் என்று நினைத்தவர்கள் நட்புக் கரம் நீட்டி உண்மையான அன்போடு அணுகுவார்கள். நண்பர்கள் மேலும் நெருக்கமாவார்கள்.
அலுவலகத்தில் கடுமையாக உழைப்பீர்கள். அதற்கேற்ற பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். அதெல்லாம் தற்காலிகம்தான். எனவே அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். முன் எப்போதோ உழைத்ததற்கு அப்போது கிடைக்காத நன்மையும் லாபமும் இப்போது கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களால் தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்களால் எதிர்பார்த்ததைவிடவும் சற்று அதிகமான செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்குத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர், பெற்றோர்களின் பாராட்டுகள் உற்சாகப்படுத்தும்.
மேல்படிப்புக்கு வெளிநாட்டு முயற்சிகள் மேற்கொண்டால் சற்றே தடை, தாமதம் மற்றும் சஸ்பென்ஸ் வைத்துப் பிறகே நிறைவேறும்.
வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் - மனைவிக்கிடையே கடந்த ஆண்டுகளில் வெளி மனிதர்களைக் காரணமாக வைத்து, ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். அவர்கள் முதல் மதிப்பெண் வாங்கி பாஸ் செய்வார்கள். அல்லது உயர் உத்யோகத்தில் அமரக்கூடும்.
சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது வாழ்க்கைத்துணையின் ஆலோசனை கேட்டுச் செய்வீர்கள் என்பதால் வெற்றியும் மனைவியின் மகிழ்ச்சியும் உங்களை நிம்மதியாக வைக்கும்.
மொத்தத்தில் கடந்த மூன்று ஆண்டுகளைவிட அற்புத வருடமாக இந்தப் ‘பராபவ’ அமையும்.
மற்ற ராசிபலன்களை படிக்க Click Here