கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர நிகழ்வில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர நிகழ்வில்  சண்டிகேஸ்வரர் திருவீதி உலா!
Published on

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சண்டிகேஸ்வரர் திருவீதி உலா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சண்டிகேஸ்வரர் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியங்களும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் சிறப்பாக நிகழ்ச்சி தொடங்கியது. இவ்வாலயம் தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது ஒன்று ஆகும். மேலும் இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும், இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர் மற்றும் இங்கு சித்தர் கருவூராருக்கு தனி ஆலயம் உண்டு என்பது சிறப்பு வாய்ந்தது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தர்நாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் சிறப்பாக நிகழ்ச்சி தொடங்கியது.

நாள்தோறும் திருவீதி உலா மற்றும் திருக்கல்யாணம் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு வண்ண மாலைகள் அணிவித்து மேல தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து சண்டிகேஸ்வரர் திருவீதி உலா புறப்பட்டார். ஆலய முக்கிய வீதியில் வழியாக வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார். ஆலயம் குடிபுகுந்த சண்டிகேஸ்வர சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டினார். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். கரூர் பசுபதீஸ்வரர் சிவ ஆலயத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உலா வந்ததினையடுத்து ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு சண்டிகேஸ்வரரை வழிபட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com