திருக்கழுக்குன்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா!

திருக்கழுக்குன்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா!

திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற கோவில் தலமான வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

திருக்கழுக்குன்றத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின், 1432 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமா்சையாக நடைபெற்றது.

முன்னதாக திருமலையில் உள்ள வேதகிரீஸ்வரர் கொடி மரத்திற்கு பூஜை பரிகாரங்கள் செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை நடைபெற்று, பின்னர் கொடியேற்றப்பட்டது. இதில் 7ஆம் நாள் திருத்தேரும், 10ஆம் நாள் தீர்த்தவாரியும், 11ஆம் நாள் சிவபெருமானுக்கு மகாபிஷேகமும் நடைபெற்றது.

செங்கல் பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவானது ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று 1432 ம் ஆண்டு சித்திரை திருவிழா நடத்த இந்து சமய அற நிலைத் துறை ஒப்புதலின் படி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது,

அதனைத் தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகளின் ஊர்வலம் நான்கு மாத வீதிகளிடம் நடைபெற்றது. திருவிழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஏழாம் நாள் திருத் தேரோட்டம் வரும் 01.05.2023 அன்றும், 04.05.2023 அன்று சங்கு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் ஆண்டு தோறும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

சித்திரை பெரு விழாவுக்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதங்களாக தீவிரமாக நடை பெற்று வந்தன. இந்நிகழ்வுகள் அனைத்தையும், கோவிலின் செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடத்தப் பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com