வெகு விமர்சையாக நடைபெற்ற கோயம்புத்தூர் கோனியம்மன் தேர் திருவிழா ! தண்ணீர் பாட்டில் வழங்கிய இஸ்லாமியர்கள்!

வெகு விமர்சையாக நடைபெற்ற  கோயம்புத்தூர்  கோனியம்மன் தேர் திருவிழா ! தண்ணீர் பாட்டில் வழங்கிய இஸ்லாமியர்கள்!

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் கோவை டவுன்ஹாலில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெற்று வரும் கோவை கோனியம்மன் தேர் திருவிழா. தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்பட்ட திருத்தேரானது ஒப்பணக்கார வீதி, கருப்பக்கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர்த்திடலை வந்தடைந்தது.

அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் தேர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுடன் துவங்கப்பட்ட தேர்த் திருவிழாவுக்கான கொடியேற்று விழா, அக்னிசாட்டு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விநாயகர், அம்மன் எழுந்தருளி அக்னிசாட்டு கம்பம் வைக்கப்பட்டது.

அம்மன் திருவீதி உலா திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடைபெற்றது. தேர்முட்டி வீதியில் கிளம்பிய இந்த தேர், டவுன்ஹால் முக்கிய வீதி வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேரில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேர் திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து ஆறாம் தேதி வசந்த விழா உடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

இந்த விழாவில் கோவை கோனியம்மன் கோயில் தேர் திருவிழாக்கு வருகை தரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க, கோயில் அருகே உள்ள அத்தர் ஜமாத் பள்ளிவாசல் முன்பு பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கிய இஸ்லாமியர்கள் சமய நல்லிணக்கத்திற்கு வழி வகுத்த காட்சிகள் வைரலாக பரவியது.

கோனியம்மன் கோவில் தேரோட்டம் காரணமாக கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com