மதுரை சித்திரை திருவிழா காண வாருங்கள்!

மதுரை சித்திரை திருவிழா காண வாருங்கள்!

லகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா இம்மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது! இந்தத் திருவிழா நிகழ்வின் அட்டவணை கீழே…

ஏப்ரல் 23 ஞாயிறு - சித்திரை திருவிழா கொடியேற்றம், சாமி கற்பக வருஷ வாகனம் மற்றும் அம்பாள் சிம்ம வாகனத்தில் புறப்படுதல்.

ஏப்ரல் 24 திங்கட்கிழமை - சாமி பூத வாகனத்திலும் அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளல்.

ஏப்ரல் 25 செவ்வாய்க்கிழமை - சாமி கைலாச பருவதம் வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளல்.

ஏப்ரல் 26 புதன்கிழமை - தங்கப் பல்லக்கு.

ஏப்ரல் 27 வியாழக்கிழமை - வேடர் பறி லீலை, தங்கக் குதிரை வாகனம்.

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை - சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை மற்றும் ரிஷப வாகனம்.

ஏப்ரல் 29 சனிக்கிழமை - நந்திகேஸ்வரர் யாளி வாகனம்.

ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை - ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்ஹாசன உலா.

மே 1 திங்கட்கிழமை - ஸ்ரீ மீனாட்சி திக் விஜயம், இந்திர விமான உலா.

மே 2 செவ்வாய்க்கிழமை - ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், யானை வாகனம், புஷ்பப் பல்லக்கு.

மே 3 புதன்கிழமை – திருத்தேரோட்டம், சப்தவர்ண சப்பரம்.

மே 4 வியாழக்கிழமை – தீர்த்தம், வெள்ளி விருட்ச ஸேவை. இரவு தல்லாகுளத்தில் எதிர்சேவை. அன்றே தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிர்சேவை.

மே 5 வெள்ளிக்கிழமை - ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல். ஆயிரம் பொன் சப்பரத்துடன் வண்டியூரில் இரவு சைத்யோபாச்சரம்.

மே 6 சனிக்கிழமை - திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபம் சேஷ வாகனம், காலை மதியம் கருட வாகனம், மண்டூக மகரிஷிக்கு மோட்சம், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.

மே 7 ஞாயிறு - ஞாயிற்றுக்கிழமை காலை மோகன அவதாரம், மைசூர் மண்டபத்தில் புஷ்பப் பல்லக்கில் இரவு கள்ளழகர் திருக்கோலம்.

மே 8 திங்கள்கிழமை - ஸ்ரீ கள்ளழகர் திருமாலிருஞ்சோலை எழுந்தருளல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com