தேவ் உதானி ஏகாதசி விரதத்தின் மந்திரம் மற்றும் பலன்கள்!

Dev Udhani Ekadasi
Amman Image
Published on

பிரபோதினி ஏகாதசி, தேவ் உதானி ஏகாதசி அல்லது தேவுத்தானா ஏகாதசி  என்றும் அழைக்கப்படும். தேவ் உதானி ஏகாதசி இந்துக்களால் கொண்டாடப்படும் 24 ஏகாதசிகளில் மிக முக்கியமான ஏகாதசியாகும். இது கார்த்திகை மாதத்தின் சுக்லபட்ச ஏகாதசி திதியில் கொண்டாடப்படுகிறது.

சதுர்மாஸ் காலத்தில் விஷ்ணு நான்கு மாத தூக்கத்திற்கு பிறகு எழுந்ததை குறிக்கிறது. இது பக்தி விரதம் மற்றும் சடங்குகள் நிறைந்த இந்த நாள் நவம்பர் 12  செவ்வாய்க்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தேவ் உதானி ஏகாதசி அதிகமாக கொண்டாடப்படுகிறது.

தேவ் உதானி ஏகாதசி எப்பொழுது:

தேவ் உதானி ஏகாதசி நாளில் தெய்வங்கள் துயில் எழும் என்று நம்பப்படுவதால், தெய்வங்கள் எழுந்தருளும்போது மங்கள சக்திகள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வருடம் தேவ் உதானி ஏகாதசி இன்று (நவம்பர் 12 ஆம் தேதி) முதல் தொடங்குகின்றன.

தேவ் உதானி ஏகாதசி என்றால்: 

தேவ் உதானி ஏகாதசி என்பது கடவுளின் பாதங்களை தரிசிக்கும் ஒரு சந்தர்ப்பமாக கருதப்படுவதால் கடவுளின் பாதங்களை தொடும் வாய்ப்பு இன்று கிடைக்கிறது. கடவுளுடைய பாதங்களை தொட்ட பிறகு பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

தேவ் உதானி ஏகாதசி நாளின் பலன்:

தேவ் உதானி ஏகாதசி நாளில் மனம்மற்றும் உடல் சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில் கிரகங்களின் நிலையும் சாதகமாக மாறும். அத்தகைய சூழ்நிலையில், சுப காரியங்களைச் செய்தால் பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தேவ் உதானி ஏகாதசி நாளில் வணங்க வேண்டிய தெய்வம்

தேவ் உதானி ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவின் பாதங்களை வணங்கி, அவரது பாதங்களைத் தொட்டு வரம் கேட்டால் நிச்சயம் அந்த வரம்  கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
நம் உறக்கத்தைக் கெடுக்கும் கும்பகர்ணன்!
Dev Udhani Ekadasi

தேவ் உதானி ஏகாதசி அன்று செய்யவேண்டியவை

திருமணம் ஆகாத ஆண், பெண் யாராக இருந்தாலும் தேவ் உதானி ஏகாதசி அன்று ஸ்ரீ ஹரியை வழிபடுவதன் மூலம் உங்களது விருப்பம் நிறைவேறும் மற்றும் பொருளாதார தடைகள் விலகும் மேலும் உங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கவும் உகந்த நாள்.

தேவ் உதானி ஏகாதசி பரிகாரங்கள்:

திருமணம் ஆகவில்லை என்றால் தேவ் உதானி ஏகாதசி நாளில் இரவில் கண்விழித்து விஷ்ணு சஹஸ்கரநாமம் சொல்லி, காலையில் எழுந்ததும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்.

தேவ் உதானி ஏகாதசி மந்திரம்:

நிதி சிக்கல்களால் சிரமப்பட்டால், இந்த ஏகாதசி நாளில் நள்ளிரவில்  ஓம் ஹ்ரீம் ஸ்ரீ லக்ஷ்மி வாசுதேவாயை நம என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டிய வரம் கிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com