திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க  24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!

இன்று திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்து உள்ளது. சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனத்திற்காக ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்காக நீண்ட ஐந்து கிலோ மீட்டர் வரிசையிலும் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

திருப்பதி பெருமாள் தரிசனம் செய்ய 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 4 மணி நேரம் ஆகின்றதாம் , இலவச தரிசன டோக்கன் வாங்கிய பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். நேற்று 62,005 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு, கோவில் உண்டியலில் 3 கோடியே 75 லட்ச ரூபாயை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ள காரணத்தால் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இருக்கும் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் டோக்கன் வாங்காமல் திருமலைக்கு சென்று வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இடம் கிடைக்காத பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com