கருங்காலி மாலையை பிரசாதமாக வழங்கும் பாதாள முருகனைப் பற்றித் தெரியுமா?

பாதாள செம்பு முருகன்
பாதாள செம்பு முருகன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம்பட்டியில் எழுந்தருளியிருக்கும் பாதாள செம்பு முருகன். இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இருக்கிறது. பாதாளத்தில் இறங்கி முருகனை தரிசித்து விட்டு வருவதால் இவர் பாதாள முருகன் என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலின் முன்புறத்தில் 15 அடியில் பெரிய சங்கிலி கருப்பன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே சங்கிலி கருப்பன் முருகன் கோவிலில் இருப்பது இங்கே மட்டுமாக தான் இருக்கும்.

ஸ்தலம் தோன்றிய வரலாறு:

போகர் பழனியில் நவபாஷானத்திலே முருகர் சிலையை செய்து வைத்தார். இதனால் அங்கே வரும் முருக பக்தர்கள் உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதற்காக.

அதைப்போல போகரின் சீடரான திருக்கோவிலார் ஒன்றரை அடி உயரத்தில் முருகனை ஐந்து உலக கலவையான தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகியவற்றை சேர்த்து முருகன் சிலையை செய்து நிறுவியிருக்கிறார். முருகர் சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்து வருவது உடல் நலத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பாதாள முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:

குழந்தை வரம், செல்வம், பயமின்மை போன்றவை தருவார் பாதாள முருகன் என்று கூறப்படுகிறது.

பாதாள முருகனுக்கு நடத்தப்படும் திருவிழாக்கள்:

புரட்டாசி பிரம்மோஸ்தவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைக்குண்ட ஏகாதசி, சரவண தீபத்திருவிழாக்கள் இங்கே பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

பாதாள செம்பு முருகன்
பாதாள செம்பு முருகன்

செம்பு பாதாள முருகனின் சிறப்பம்சம்:

பொதுவாக முருகன் கோவில்  ஏற்றமாகவும் வரும் போது இறக்கமாகவும் இருக்கும். ஏனெனில் முக்கால்வாசி முருகன் கோவில்கள் மலையிலே அமைந்திருக்கும்.

ஆனால் இங்கே வரும் போது இறக்கமாகவும், போகும் போது ஏற்றமாகும். அதனால் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதால் வாழ்க்கையில் ஏற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து சென்று வந்தால் நினைத்தது கைக்கூடும் என்பது நம்பிக்கை. பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்கள் என்று இந்த கோவிலுக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கருப்பு நிற கேரட்டில் உள்ள ஆரோக்கிய குணம் தெரியுமா?
பாதாள செம்பு முருகன்

பாதாள முருகன் கோவில் பிரசாதம்:

பாதாள முருகன் கோவிலிலே கருங்காலி மாலையை முருகன் பாதங்களில் வைத்து பிரசாதமாக தருகிறார்கள்.

கருங்காலி மாலை அணிவதால் செல்வ வளம் கிடைக்கும், ராகு கேது தோஷம் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். மன அழுத்தம் குறையும், இரத்த அழுத்தம் சீராகும்.

இதை நிறைய பிரபலங்கள் அணிந்திருப்பதை காணலாம். முக்கியமாக சினிமா பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் செம்பு பாதாள முருகனை ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com