சுருளிமலை சுருளி ஆண்டவர் பற்றி தெரியுமா?

சுருளியாண்டியவர்...
சுருளியாண்டியவர்...
Published on

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளியில் சுருளி ஆண்டவர் கோவில் உள்ளது. பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்கு தொடர்ச்சி மலை பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. புராண பெயர் சுருதி மலை. மூலவர் சுருளி வேலப்பர் மற்றும் சுருளி ஆண்டவர். உற்சவர் வேலப்பர். தீர்த்தம் சுரபி தீர்த்தம் சுருளி தீர்த்தம்.

இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால் சுருதி எனப்பட்ட தீர்த்தம் சுருளி என மருவியது. முருகனுக்கும் சுருளி வேலப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டி கோலத்தில் இருப்பதால் இவர் சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார். அருகில் விநாயகர் மகாலிங்கம் சந்தானகிருஷ்ணர், வீரபாகு, ராமபிரான், லட்சுமணன் உள்ளனர். முருகன் குடிகொண்டதால் நெடுவேள் குன்றம் என்று அழைக்கப்படும்.

இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பதால் அனைவருக்கும் தனிச்சிலைகள் உள்ளன. இங்கு பூத நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருக்கிறது. இதனால் இங்கு விபூதி குங்குமம் தருகிறார்கள்.சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக்கால பூஜையின்போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோவிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மர் சிவனுக்கு தக்ஷிணாமூர்த்திம் இருக்கின்றனர். இவர் இடது கையில் சின்முத்திரையுடன் காட்சி அளிக்கிறார். சுருளியாண்டியவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரபலமான பெயர் பெற்றது.

இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமானை தரிசனம் பெற்றார். இந்த குகையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒருவர் மட்டும் படுத்துக்கொண்டு போகக்கூடிய இந்த குகையில் சிறிய தூரம் தவழ்ந்து சென்றதுமே குகையில் உள்ளே பெரிய அறை போன்ற அமைப்பு உள்ளது. மேலே சென்றால்அங்கு ஆகாச கங்கை வரும் வழியில் பல குகைகளை காணலாம். கோவில் உள்ள மலையில் கைலாச குகை என்ற குகை உள்ளது. இந்த குகையில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி கொடுத்தபடியால் இந்த குகை கைலாச குகை என்று அழைக்கப்படுகிறது. சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்கு சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம் மலைக்கு அகஸ்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்கு உள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சி அளித்தார்.

சுருளியாண்டியவர் சந்நதி
சுருளியாண்டியவர் சந்நதி

இக்குகை தவிர விபூதி குகை சர்ப்ப குகை பாட்டையா குகை கிருஷ்ணன் குகை கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன.

கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டே இருக்கிறது 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை தழைகள் பாறை போல மாறுகிறது பாறை மீது ஏற்படும் பாசி வழுக்குத் தன்மை இன்றி இருப்பது வியப்புக்குரியது.

இதையும் படியுங்கள்:
இந்தக் கலைக்கு இத்தனை சிறப்பா?
சுருளியாண்டியவர்...

இங்குள்ள மரம் ஒன்றின் மீது தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக மாறி காட்சி அளிக்கிறது கோவில் வளாகத்தில் விபூதி பாறை உள்ளது. இந்த பாறையில் தீர்த்தம் பட்டு ஈரமான மணல் துகள்கள் காய்ந்த பின் வெண்ணிறத்தில் விபூதியாக மாறுகிறது இந்த விபூதியை பிரசாதமாக தருகிறார்கள்.

இங்குள்ள முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் இனிப்பு நெய்பொங்கல் புனித பிரசாதமாக வழங்கப் படுகிறது. 

சென்னையில் இருந்து விழுப்புரம் திண்டுக்கல் வழியாக தேனியை அடைந்து சுருளி மலைக்கு செல்லலாம். காரில் சுருளியை அடைவது சிறந்த சுற்றுலாவாகவும் அமையும். சுற்றி உள்ள அருவிகளும் பசுமை காடுகளும் ஆன்மிக தலமும் இப்பயணத்தை இன்னும் மேன்மை அடைய செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com