அஷ்ட(8) சாஸ்தா தெரியுமா?

அஷ்ட சாஸ்தா
அஷ்ட சாஸ்தா

ரிஹரபுத்திரனான சுவாமி ஐயப்பன் ஆதி தர்மசாஸ்தாவின் அம்சம் என்றும் அவர் எட்டு அவதாரங்கள் எடுத்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த எட்டு அவதாரம் நான்கு யுகங்களில் ஒவ்வொரு காலகட்டத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த அவதாரத்திரு உருவை மிகவும் பழைமையான கோயில்களில் தரிசிக்கலாம்.

1. கல்யாண வரத சாஸ்தா

கல்யாண வரத சாஸ்தா
கல்யாண வரத சாஸ்தா

வர் பிரம்மனின் புதல்விகளான பூரணி புஷ்கலை இருவரையும் மணம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு சாமி ஐயப்பனாக அவதரித்து பிரம்மச்சரியம் கடைப்பிடித்து அதர்மத்தை அழித்தார். இதுவே சாஸ்தாவின் கடைசி அவதாரம் என்பர்.

2. ஸ்ரீ ஆதி பூதநாதர்

ஸ்ரீ ஆதி பூதநாதர்
ஸ்ரீ ஆதி பூதநாதர்

கிராமம் நகரம் நாடு என எல்லாவற்றையும் காத்து பரிபாலிக்கும் மூர்த்தி மக்களையும் மாக்களையும் பிணியின்றி ஆதவனாய் காத்தருளும் இந்த மூர்த்தியே ஐயனார் சாமியாக வணங்கப்படுகிறார்.

3. ஸம்மோஹன சாஸ்தா

ஸம்மோஹன சாஸ்தா
ஸம்மோஹன சாஸ்தா

நாம் வீட்டில் இல்லாத நேரத்தில் நமது வீட்டையும் குடும்பத்தையும் காத்தருள்பவர். ஒளிமண்டலத்தில் சந்திரனாய் ஒளி வீசி இல்லற ஒற்றுமை ஓங்கச் செய்யும் அமுதசொரூபி இந்த மூர்த்தி.

4. வேத சாஸ்தா

வேத சாஸ்தா
வேத சாஸ்தா

புததேவன் போல சாஸ்திரஞானம் அருளி வேதம் தழைக்க வழிவகுத்து வேதத்தின் சொற்படி நம்மை அழைத்துச் செல்லும் தெய்வ சொரூபம் இந்த மூர்த்தி.

5. ஞான சாஸ்தா

ஞான சாஸ்தா
ஞான சாஸ்தா

ல்லால மரத்தின் கீழ் நான்கு சீடர்களுடன் அருளாட்சி புரிந்து மாணிக்க  வீணையை கையிலேந்தி மேதா தக்ஷிணாமூர்த்தியாக குரு பகவான் ஸ்தானத்தில் அமர்ந்து நமக்கும் நம் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு வளரச் செய்யும் ஈஸ்வர சொருபமாக திகழ்பவர் இவர்.

இதையும் படியுங்கள்:
எதிலும் நிதானம் தேவை!
அஷ்ட சாஸ்தா

6. பிரம்மசாஸ்தா

பிரம்மசாஸ்தா
பிரம்மசாஸ்தா

ந்தான பிராப்தி நாயகனாக பிரம்ம சாஸ்தாவாக மலட்டுத்தன்மை நீக்கி மகப்பேறு தரும் சாஸ்தாவின் திருக்கோலம் இது.

7. மகா சாஸ்தா

மகா சாஸ்தா
மகா சாஸ்தா

வாழ்வில் முன்னேற்றம் தருபவர். ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் நீக்கி நலம் தருபவர்.

8. வீர சாஸ்தா

வீர சாஸ்தா
வீர சாஸ்தா

கேதுவை போல கைகளில் ஆயுதம் தாங்கியும் குதிரை மீதமர்ந்து தீயவர்களை அழிக்கும் அபய வரதனாகவும் காட்சி தரும் இம்மூர்த்தி ருத்ர புத்திரனாக திகழ்கிறார்..

ஸ்ரீ தர்மசாஸ்தா நமது தவறுகளை களைந்து பிழை பல பொறுத்து நமக்கு ஞானமும் மௌனமும் உபதேசித்து நம்மை தடுத்தாட்கொண்டு அருளும் கலியுக தெய்வம். இவர் சபரியில் வீற்றிருக்கும் சத்திய திரு உருவம். சாமி ஐயப்பனே தர்மசாஸ்தா ஹரிஹரபுத்திரனான சாஸ்தாவின் தெய்வீக மகிமையையும் சொரூபங்களையும் தூய பக்தி கொண்டு துதித்து வணங்கிட துன்பங்கள் நீங்கி ஐயனின் அருள் பெறலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com