Giving alms...
Donation is the bestImage credit - thattungal.com

தானத்திலே சிறந்த தானமான அன்னதானம் செய்வது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Published on

ம்முடைய வாழ்வில் நிச்சயமாக அன்னதானம் என்பதை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில், தானங்களிலே சிறந்த தானம் அன்னதானமேயாகும். பசியென்று வருபவர்களுக்கு உணவளிப்பதை விட வேறு பெரிய புண்ணியம் இப்பூவுலகில் கிடையாது. அத்தகைய அன்னதானத்தின் சிறப்பை ஒரு குட்டிக்கதையின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

மகாபாரத போரில் மடிந்த கர்ணன் நேராக சொர்க்கத்துக்கு செல்கிறான். அங்கே கர்ணனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. ஆனால், கர்ணனுக்கு அங்கே பசி வாட்டி எடுக்கிறது.

கர்ணனோ, 'சொர்க்கத்தில் பசி எடுக்காது என்று சொல்வார்களே நமக்கு மட்டும் ஏன் பசி வாட்டி எடுக்கிறது' என்று யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கே நாரதர் வருகிறார். கர்ணன் நாரதரிடம் கேட்கிறான், 'சொர்க்கத்தில் பசி போன்ற உணர்வுகள் தோன்றாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னை பசி வாட்டி எடுக்கிறதே ஏன்?' என்று கேட்கிறான்.

அதற்கு நாரதரோ, 'உன் பசி போவதற்கு ஒரு வழி இருக்கிறது. உன் ஆள்காட்டி விரலை எடுத்து வாயில் வைத்துக்கொள். உனக்கு பசிக்காது' என்று நாரதர் கூறினார். அதைப்போலவே கர்ணன் தன் ஆள்காட்டி விரலை எடுத்து வாயில் வைத்ததும் பசி நீங்கிவிடுகிறது. இதுவே அவன் விரலை எடுத்தால் திரும்ப பசிக்க ஆரம்பித்துவிடுகிறது. இதற்கான காரணம் என்னவென்று நாரதரிடம் கர்ணன் கேட்கிறான்.

அதற்கு நாரதர், 'கர்ணா உன் வாழ்க்கையில் அத்தனை தானதர்மமும் செய்த நீ அன்னதானத்தை மட்டும் செய்ய தவறிவிட்டாய். அதனால்தான் உனக்கு இங்கு பசி ஏற்படுகிறது. ஆனால், ஒருமுறை நீ அன்னசத்திரம் எங்கேயிருக்கிறது என்று கேட்ட ஒருவருக்கு உன் ஆள்காட்டி விரலால் வழிக்காட்டினாய். ஆகவே, உன் ஆள்காட்டி விரல் மட்டுமே அன்னதான பலன் பெற்றது' என்று பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!
Giving alms...

பசி என்று வருபவர்களுக்கு உணவளிப்பதே சிறந்த தானமாக கருதப்படுகிறது. அன்னதானம் செய்வதால், பூர்வ ஜென்ம கர்மவினைகள் நீங்கும், பித்ருக்களின் ஆசி கிடைக்கும். அன்னதானம் செய்பவருக்கு எப்போதும் இறையருள் குறையாமல் கிடைக்கும். மேலும் வறுமை தீண்டாது மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

logo
Kalki Online
kalkionline.com