வீட்டில் சங்கு தீபம் ஏற்றுவதால் எத்தனை நன்மைகள் தெரியுமா?

Sangu Deepam
Benefits of Sangu DeepamImage Credits: Samayam Tamil
Published on

ம் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷத்திற்காகவும், மங்களகரமாக இருக்கவும் விளக்கு ஏற்றுவது வழக்கம். விளக்கு வீட்டிற்கு ஒளியை தருகிறது, வீடு சுபிக்ஷமாக இருக்க உதவுகிறது. அத்தகைய விளக்கு ஏற்றும் முறையில் இன்று நாம் காண விருப்பது சங்கு தீபம்.

கடலில் இருந்து எடுக்கப்படும் சங்கு எப்போதுமே ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். உங்களிடம் இருக்கும் சங்கு வலம்புரியோ அல்லது இடம்புரியோ எதுவாக வேண்டுமோ இருக்கட்டும். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தீபம் ஏற்றினால், வீட்டில் பஞ்சம், பசி, கவலை, துன்பம் இருக்காது. சங்கு தீபத்தை கிழக்கு முகமாக வைத்து ஏற்றுவது அதீத பலனை தரும்.

முதலில் சங்கை தண்ணீரிலே சிறிது மஞ்சள்தூள் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சாத பாலில் சுத்தம் செய்து விட்டு, பன்னீரில் சுத்தம் செய்து கொள்ளலாம். அதை எடுத்து நன்றாக துடைத்துவிட்டு மஞ்சள், குங்குமமிட்டு அதை ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து சங்கில் நெய், நல்லெண்ணெய் கலந்து ஊற்றி தாமரை தண்டு திரி அல்லது பஞ்சு திரி போட்டு விளக்கேற்றலாம். இது மகாலக்ஷ்மி தாயாருக்கு ஏற்றுவது சிறப்பு. இந்த சங்கு தீபத்தை வளர்பிறையில் வரும் வெள்ளிகிழமையில் சுக்கிர ஹோரை அல்லது குரு ஹோரையில் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். நெய்வைத்தியமாக கற்கண்டு அல்லது பால் பாயாசம் வைக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்த பிறகு மகாலக்ஷ்மி தாயாருக்கு ‘ஓம் மஹாலக்ஷ்மியே நமஹ’ என்று 108 தடவை சொல்லி முடித்து ஆரத்தி காட்டவும். இந்த பூஜையை தினமும் செய்வது சிறப்பு. சங்கு மகாலக்ஷ்மியின் அம்சம், அதனால் சங்கில் தீபம் ஏற்றும்போது எல்லா செல்வ வளமும் நமக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் பல்லி சத்தம் எழுப்புவதால் என்னென்ன பலன்கள் என்று தெரியுமா?
Sangu Deepam

நம் வீட்டில் பூஜையறையில் வைத்திருக்கும் சங்கை எப்படி சுத்தம் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் ஒரு பவுலில் சிறிது பால் மற்றும் தண்ணீர் கலந்து எடுத்துக் கொள்ளவும். பஞ்சை எடுத்து பாலில் முக்கி சங்கை நன்றாக துடைக்கவும். இதை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செய்யலாம். பிறகு மஞ்சள் குங்குமமிட்டு எடுத்து கொண்டு அதை ஒரு பித்தளை தட்டில் பச்சரிசியை நிரப்பி அதில் இந்த சங்கை வைக்க வேண்டும். இப்போது அந்த சங்கில் கொஞ்சம் அரிசியையும், சில்லரை காசுகளையும் போட்டு அதை பூஜையறையில் வைத்து விட வேண்டும். இப்போது இந்த சங்கிற்கு பூஜை செய்து வர அதில் போட்டு வைத்த தனமும், தான்யமும் குறைவின்றி நமக்கு எப்போதுமே கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com