மாரியம்மனை ஒவ்வொரு கிழமையும் வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

கோட்டை பெரிய மாரியம்மன்
கோட்டை பெரிய மாரியம்மன்
Published on

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், அம்மனை வழிபடுவதற்காக மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கான வழிபாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு ஆடி மாத வழிபாடு சிறப்புக்குரியதாக இருந்தாலும் அனைத்து நாட்களுமே அன்னையை வழிபடுவதற்கு உகந்த நாட்கள்தான்.

கிரகணத்தையே வென்ற தாய் என்பதால் அம்மனை எல்லாநாட்களிலும் விரதம் இருந்து வழிபடலாம். அவ்வகையில், ஒவ்வொரு நாள் விரதத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை: இந்த நாளில் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

திங்கட்கிழமை: திங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்கி நன்மை பெறுவர். இந்த கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் உடல்நல குறைவில் இருந்து தப்பி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டு விரதமிருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கி மங்கலம் உண்டாகும். பில்லி, சூனிய பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில் விரதமிருந்து பலன் அடையலாம்.

புதன் கிழமை: புதன் கிழமைகளில் அம்மனை தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும். இந்த கிழமையில் அம்மனை மனமுருகி வழிபட்டு வந்தால் மேன்மை அடையலாம்.

இதையும் படியுங்கள்:
கண்களின் ஆரோக்கியத்தை காக்கும் 7 உணவுகள்!
கோட்டை பெரிய மாரியம்மன்

வியாழக்கிழமை: குரு அம்சம் நிறைந்த வியாழக் கிழமையில் அம்மனை இருந்து வழிபட்டால் வாழ்வில் எதிரிகள் தொல்லைகள் உள்ளிட்ட அனைத்து தொல்லைகளும் நீங்கி சுகம் பெறுவர்.

வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசித்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

சனிக்கிழமை: வழக்குகளில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்கவும் அம்மனுக்கு சனிக்கிழமைகளில் இருந்து வழிபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com