விஸ்வரூப தரிசனத்தின் முக்கியம் எது தெரியுமா?

விஸ்வரூப தரிசனத்தின் முக்கியம் எது தெரியுமா?

புகழ் பெற்ற ஆலயம் ஒன்றுக்கு தினமும் அதிகாலையில் பூஜைக்கு  பக்தர் ஒருவர் வருவது வழக்கம். அந்த ஆலயத்தில் மற்ற நேரங்களில் நிறையக் கூட்டம் இருக்கும் என்பதால், அதிகாலையில் நெரிசலோ, இரைச்சலோ இருக்காது என்பதால் அந்த நேரத்தில் வந்து வழிபடுவார்.

அக்கோயிலுக்கு ஒரு தடவை அதிகாலையிலேயே சில சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அதிகாலையில் இறைவனின் விஸ்வரூப தரிசனம் காண்பது அவ்வளவு விசேஷம். விஸ்வரூப தரிசனம்  என்றால் நாம் அதிகாலையில் குளித்து விட்டு  ஆலயத்துக்கு சென்று இறைவனின் முந்தைய நாளின் அலங்காரத்தை பார்ப்பது.

முதல் நாள் இரவு பூஜையை முடித்துவிட்டு ஆலயத்தின்  நடையை சார்த்திவிட்டு அர்ச்சகர்கள் சென்ற பின் தேவதைகள் வந்து அவரை பூஜிப்பதாக ஐதீகம். அதே அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அதிகாலை தரிசனம் தருவார் இறைவன். அதன் பின் அவருக்கு அபிஷேகங்கள் செய்வார்கள்.

அன்று வந்த பக்தர்கள் கூட்டத்தில் கண்பார்வையற்ற வர்கள் பத்து பேர் இருந்தனர். காலை நேரத்தில் அவர்கள் விஸ்வரூப தரிசனம் பார்க்க வந்ததை பக்தர் பார்த்து வியந்து, அவர்கள் சென்ற பின் அர்ச்சகரிடம் சந்தேகம் கேட்டார்.

விஸ்வரூப தரிசனத்தை எங்களால் இறைவனை பார்க்க முடியும், ஆனால் பார்வையற்ற இவர்களால் எப்படி முடியும்?

இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறார்களே? இவர்களால் இறைவனை பார்க்க முடியாதே? எனக் கேட்டார்.

அர்ச்சகர் சிரித்தபடி பதில் சொன்னார்.

"நீங்கள் நினைப்பது தவறு, நம்மை விட பகவானை அவர்கள்தான் அதிகம் உணர முடியும். நாம் சென்று இறைனைப் பார்ப்பதே 'தரிசனம்'.

இறைவன் நம்மைப் பார்ப்பது 'விஸ்வரூப தரிசனம்' .

தன்னை தரிசிக்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார்.

இதையும் படியுங்கள்:
கடவுளின் பூமி காந்தலூர் சுற்றிப்பார்க்கலாம் வாங்க!
விஸ்வரூப தரிசனத்தின் முக்கியம் எது தெரியுமா?

அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அதுவே விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பு. இத்தரிசனத்தை அவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்பதற்காகவே வந்துள்ளனர்' என்றார் அர்ச்சகர்.

இறைவனை நாம் பார்ப்பதைவிட,  இறைவன் நம்மை பார்ப்பது முக்கியம் அல்லவா? இறைவனின் அருட்பார்வை நம் மீது விழ வேண்டும் என்ற நினைப்புடன் அருகில் உள்ள ஆலயம் நாம் சென்று

இறைவனின் அருட்பார்வை விழுந்து துன்பங்கள் நீங்கி அருள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com