சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

Devotees to Sabarimala...
Swamy ayyappan
Published on

பரிமலைக்கு பக்தர்கள் மாலையிட்டு கடும் விரதம் மேற்கொண்டு, காட்டுப் பாதையில் கல், முள் என்று கடினங்களை எல்லாம் தாண்டி ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இது ‘கடவுளை சென்றடையும் பாதை சுலபமானது அல்ல. எல்லா கடினங்களையும் கடந்து வரும் போதே கடவுளின் திருவடியை சென்று சேர முடியும்’ என்பதை உணர்த்தும் தத்துவம் ஆகும்.

அத்தகைய சபரிமலை யாத்திரையில் முக்கிய இடமாக இருப்பது எருமேலியாகும். எருமை தலைக்கொண்ட அரக்கியான மஹிஷியை ஐயப்பன் இந்த இடத்தில் சாம்ஹாரம் செய்ததால், இந்த இடம் ‘எருமைக்கொல்லி’ என்று பெயர் பெற்றது. பிறகு ‘எருமேலி’ என்று பெயர் மருவியது என்று சொல்லப்படுகிறது.

சபரிமலையிலே ஆனந்த சித்தனாக இருக்கும் ஐயப்பன். இவ்விடத்தில் ஆங்கார வேட்டையனாக காட்சி தருகிறார். இவ்விரண்டும் முரணாக தோன்றினாலும், இதிலும் ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது.

இங்கே ஐயப்பன் வேட்டைக்காரனாக காட்சி தருவது வனவிலங்குகளை அழிப்பதற்காக இல்லை. மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் காமம், கோபம், குரோதம் போன்ற கொடிய மிருங்களை அழிப்பதற்காகவே கையில் வில்லும், அம்பும் ஏந்தி இருக்கிறார்.

இந்த வேட்டையால் அறிவு சுடர் எழுந்து, ஆணவம் அழிந்து சத்தியம் பிறக்கிறது. 'ஆணவம் அழிவது சபரிமலையிலே, அமைதி பிறப்பது சபரிமலையிலே' என்று கூறும்படி ஆணவத்தை எருமேலியில் அழித்துவிட்டு பகவானின் பூங்காவனத்திற்குள் சென்று ஐந்தாம் படை வீடான எருமேலியிலிருந்து ஆறாம் படை வீடான சபரிமலைக்குள் நுழையும் விதமாக பெரியப்பாதையில் ஐயப்ப பக்தர்கள் பயணப்படுவார்கள்.

எருமேலியில் இருந்து சற்று தொலைவில் உள்ள வாவர் கோவிலில் உள்ள முஸ்லிம் நண்பர்கள் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுடன் சேர்ந்து விழாக்களை கொண்டாடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சபரிமலையில் உள்ள அழுதா நதி உருவான வரலாறு!
Devotees to Sabarimala...

எருமேலியில் நடைபெரும் ‘பேட்ட துள்ளல்' என்னும் நடனத்தை கன்னி சாமிகள் ஆடிக்கொண்டே செல்வார்கள். அச்சமயம் கன்னி சாமிகள் உடல் முழுவதும் சாம்பல், குங்குமப்பூ, வர்ணங்கள் என்று பூசிக்கொண்டு செல்வார்கள். இது சுவாமி ஐயப்பன் அரக்கியான மஹிஷியை வதம் செய்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டியதற்காக ஆனந்த நடனமாக கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com