‘திருநெல்வேலி’ என்று பெயர் வரக் காரணம் தெரியுமா?

Tirunelveli name reason
Tirunelveli name reasonImage Credits: Maalaimalar
Published on

திருநெல்வேலிக்கு அந்த பெயர் வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?அதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

சிவபெருமானின் மீது அளவுக்கடந்த பக்தி வைத்திருந்தார் வேதப்பட்டர். இவர் தினமும் வீடுவீடாக சென்று நெல்லை பெற்று இறைவனின் நெய்வைத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலர போட்டுவிட்டு குளிக்கச் செல்வது வழக்கம். அவ்வாறு ஒருநாள் செய்யும்போது திடீரென்று மழைப் பெய்யத் தொடங்கிவிட்டது.

குளித்துக்கொண்டிருந்த வேதப்பட்டர் மழைநீரில் நெல் நனைந்துவிட போகிறது என்று வேகமாக ஓடி வந்துப் பார்த்தால், நெல்லை சுற்றி மழை நீர் செல்வதையும் நடுவிலே நெல் மட்டும் வெயிலில் காய்வதையும் பார்த்து வியந்து போனார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு அதிசயித்த வேதப்பட்டர் இந்த விஷயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராமபாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதை பார்த்த மன்னனும் வியப்புற்றார்.

உலகிற்காக மழை பெய்வித்து வேதப்பட்டரின் நெல் நனையாது காத்த சிவபெருமானின் சிறப்பை நினைத்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் அன்றிலிருந்து இறைவனின் திருநாமத்தை ‘நெல்வேலி நாதர்’ என்றும் அதுவரை ‘வேணுவனம்’ என்று அழைக்கப்பட்ட அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்க ஆரம்பித்தனர்.

இங்கிருக்கும் நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரசித்து பெற்றதாகும். முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு பால் ஊற்றிக்கொண்டிருந்தார் ராமகோனார் என்பவர். அப்படி ஒருநாள் செல்லும் பொழுது வழியில் உள்ள ஒரு கல் அவரது காலை இடறிவிட பால் முழுவதும் அங்கிருக்கும் கல்லின் மீது கொட்டிவிடுகிறது. இப்படியே தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் நடக்க பயந்து போன ராமகோனார், இதை மன்னரிடம் தெரிவிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
‘பக்தியில் ஆணவம் கூடாது’ என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதிக்கு உணர்த்திய சம்பவம் தெரியுமா?
Tirunelveli name reason

உடனே மன்னர் ஆட்களை அனுப்பி அந்த கல்லை தோண்டுவதற்கு உத்தரவிடுகிறார். கல்லை தோண்டும் போது கல்லின் மீது கோடாரி வெட்டிவிட ரத்தம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. இதை பார்த்து பயந்து போய் அனைவரும் நிற்கும்போது, வானிலிருந்து அசரிரீ கேட்க, உடனே கல்லை முழுமையாக தோண்டி பார்த்தால், உள்ளே சிவலிங்கம் இருந்தது. நெல்லையப்பரின் இடப்பக்கத்தில் இன்றும் வெட்டுக்காயத்தை காணலாம். இதுவே நெல்லையப்பர் கோவில் தோன்றிய வரலாறாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com