கோவில் படியைத் தொட்டுக் கும்பிடுவதன் காரணம் தெரியுமா?

கோவில் படியைத் தொட்டுக் கும்பிடுவது...
கோவில் படியைத் தொட்டுக் கும்பிடுவது...www.maalaimalar.com
Published on

நாம் குனிந்து நிமிரும்போது சூரிய நாடி இயங்குவதாக சொல்லப்படுகிறது. கோவில் படிக்கட்டை விரல்களால் தொடுவோம். தொட்ட விரல்களை நெற்றியில்  ஒத்திக் கொள்வோம். இப்படிக் குனிந்து விரல்களை அந்த நிலை வாசப் படியில் வைத்து விட்டு, சரியாக இரண்டு புருவத்திற்கு மத்தியில் நம்முடைய விரல்களை லேசாக அழுத்தம் கொடுத்து எடுப்பதன் மூலமாக ஆக்ஞா  சக்கரம் செயல்பட்டு நம் உடம்பில் இருக்கும் தீய சக்தியை வெளியேற்றி விடும். தீய சக்திகள் வெளியேறிய பிறகு நாம் சன்னிதானத்திற்குள் நுழைவோம். இதனால் கோவிலில் இருக்கும் அதிர்வலைகளை நம்முடைய உடம்பு  சீக்கிரமே கிரகித்துக் கொள்ளும். இதனால் பாசிடிவ் எனர்ஜி நமக்குள் அதிவேகமாகச் செல்லும் என்று அறிவியல் பூர்வமாகவும் சொல்லப்படுகிறது.

கடவுளை வணங்கும்போது சிலருக்குக் கண்ணீர் வருவது ஏன்?

டவுளை வணங்கும்போது சிலருக்குக் கண்ணீர் வரும். இன்னும் சிலர் கோவிலுக்குச் சென்றாலே அழுது விடுவர். நமக்கு ஏதாவது கஷ்டம் வந்தாலோ அல்லது மனநிம்மதி இல்லையென்றாலோ நாம் கடவுளை நாடிச் செல்வோம். சிலருக்குக் கண்ணீர் வரக்காரணம் கடவுள் உங்களிடம் ஏதோவொன்றை  சொல்கிறார் என்று அர்த்தம். அதாவது கடவுள் உங்களிடம்  ஒரு குறிப்பை கொடுக்கிறார் என்று பொருள். நீங்கள் அதனை புரிந்து கொண்டால்  அப் பிரச்னை நீங்கி விடும். உங்கள் பிரார்த்தனை வெற்றிகரமாக  முடிந்து விட்டது. உங்கள் கோரிக்கையை கடவுள் ஏற்றுக் கொண்டார். இனி எல்லா பிரச்னையும் நீங்கி உங்கள் ஆசைகளை நிறைவேறும் என்று நம்பப் படுகிறது.

கடவுளை வணங்கும்போது...
கடவுளை வணங்கும்போது...chellaupdates.com

வாசற்படியில் ஏன் அமரக்கூடாது?

வாசற்படியிலோ,  நிலைப்படியிலே  உட்காரக் கூடாது  என்பதற்கு  சரியான காரணம்  என்னவென்றால், எதிர் சக்திகள் நம் உடலில்  புகுந்து செல்லும். எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும்  என்பதற்காகவே அவ்வாறு கூறினர். அதேபோல் வாசற்படிக்கு உட்பக்கமும், வெளிப்பக்கமும் நின்று எதையும் வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்பதற்குக் காரணமும் இதுவேதான். வாஸ்து சாஸ்திரத்தை முக்கியமாகக் கருதும் சீன மக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கும் வாசல்கள்  மற்றும் ஜன்னல்கள், நிலைகள்  போன்றவற்றை வேறு வடிவத்தில் மேல் பாகம் நோக்கி  வளைந்திருக்கும்படி அமைந்திருப்பதைக் காணலாம்.

இது எதிர்மறை சக்திகளை தவிர்ப்பதற்குத்தான். நமது கோவில்களிலும் இவ்விதம் அமைத்துள்ளனர். வாசற்படியில் தலை வைத்துத் தூங்கினால் எதிர்மறை சக்திகள் மூளையை பாதிக்கும்  என்று நம்பப்படுகிறது. அதனால் வாசல்படியில் தலை வைத்தோ அதில் உட்காரவோ  அங்கு நின்று எதையும் கொடுத்து வாங்குவது கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com