அக்னி நட்சத்திர காலத்தில் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?

அக்னி நட்சத்திரம்...
அக்னி நட்சத்திரம்...

க்னி நட்சத்திர காலத்தில் எந்த விதமான சுபகாரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சு வார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் அக்னி நட்சத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாட்களில் செடி கொடி மரங்களை வெட்டக்கூடாது.

நார் உரிக்க கூடாது.

விதை விதைக்க கூடாது.

கிணறு குளம் தோட்டங்கள் அமைக்கக் கூடாது.

நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது.

வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

அக்னி நட்சத்திரம் தண்ணீர் பந்தல் அமைக்க முடியா விட்டாலும் நம் வீட்டு மொட்டை மாடியில் வெளிப்புற பகுதிகளில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம். மற்ற ஜீவராசிகள் தாகம் தீர்த்துக் கொள்ளும். முடிந்தால் பானை தண்ணீரை வீட்டு வாசலில் வைத்தால் வழிப்போக்கர்கள் தாகத்திற்கு தண்ணீர் அருந்தி விட்டு செல்வார்கள். பசு மாட்டிற்கு கழனி தண்ணீர்  பச்சை தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். இதன் மூலம் நமக்கு புண்ணியத்தின் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

அக்னி நட்சத்திர நேரத்தில் விசிறி தானம், செருப்பு தானம்,  நீர் மோர் தானம் போன்ற தானங்கள் அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டிய முக்கிய தானங்களாகும். அது மட்டும் இல்லாமல் குளிர்ச்சியான தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றையும் கோவில்களில் தானம் கொடுப்பது புண்ணியத்தை சேர்க்கும்.

முடி இறக்குதல்...
முடி இறக்குதல்...Image credit - pixabay.com

ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது ஏழேழு ஜென்மங்களுக்கும் புண்ணியத்தை சேர்க்கும் நல்ல விஷயங்கள் ஆகும்.

அக்னி நட்சத்திர காலங்களில் கண்டிப்பாக நாம் ஒரு மரமாவது நட வேண்டும். உலகிலேயே மிக புண்ணிய விஷயம் மரம் நடுவது ஆகும். மரம் நல்லவர் கெட்டவர் என பாகுபாடு இன்றி அனைவருக்கும் நிழல் மட்டுமல்ல காய்கனிகளையும் கொடுக்கும்.

பறவைகளுக்கு தண்ணீர்...
பறவைகளுக்கு தண்ணீர்...

அதேபோல் எத்தனையோ பறவைகளுக்கு வாழ் விடமாகவும் இருக்கும். கோடையில்  நிழலில் இளைப்பாறும் மனிதர்களின் மனதிருப்தியும் பறவைகளின் மகிழ்வும் நமக்கு புண்ணியமாக கிடைக்கும். அதனால் இந்த அக்னி நட்சத்திரக் காலங்களில் அனைவரும்  மரம் நடுவது மிகப் பெரிய புண்ணியமாகும்.  மரங்களை தாராளமாக நடலாம்.

அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டியதை செய்தும் செய்யக்கூடாதவை தவிர்த்தும் இருப்பது மிகவும் சிறப்பானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com