சிவனின் கோபத்தால் உருவான வெந்நீர் ஊற்று எங்கிருக்கிறது தெரியுமா?

வெந்நீர் ஊற்று ...A
வெந்நீர் ஊற்று ...A

ந்தியாவில் இயற்கையாக தோன்றிய பல நீரூற்றுகள் இருப்பினும், இந்த கோவிலில் அமைந்துள்ள வெந்நீர் நீரூற்று சிறப்பு வாய்ந்ததாகும். அதற்கு காரணம் இந்த நீரூற்று சிவனின் கோபத்தை தனிக்க சேஷநாகத்தால் உருவாக்கப்பட்டது என்று வரலாறு உள்ளது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள இமாச்சல் பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் இருக்கும் பந்தர் என்னும் இடத்தில் உள்ள பார்வதி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது மணிக்கரன். கசோலில் இருந்து வெறும் 4 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. இவ்விடம் நிறைய சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் ராஜா ஜகத்சிங்கால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவில் குலுவிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில், 1756 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த வெந்நீர் நீரூற்று  64 முதல் 80°C வெப்பநிலை உடையது. இந்த வெந்நீர் நீரூற்றில், உணவுகளும் சமைக்கப்படுகிறது. இந்த நீரூற்றில் குளிப்பதனால், கீழ்வாதம் போன்ற நோய் குணமாவதாக கூறப்படுகிறது.

மணிக்கரன் இந்து மற்றும் சீக்கியர்கள் இருவருக்குமே புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. ஒருமுறை சிவனும் பார்வதியும் இவ்விடத்தை சுற்றிப்பார்த்து கொண்டிருந்த போது அதன் அழகில் மயங்கி இங்கேயே தங்கிவிட்டனர். அப்படியிருக்கையில் பார்வதிதேவி ஒரு நாள் தன்னிடமிருந்த விலைமதிக்க முடியாத மணியை நீரூற்றில் தொலைத்து விடுகிறார்.

அதனால் சிவனிடம் அதை கண்டுப்பிடித்து கொடுக்கும் படி கேட்கிறார். ஆனால் சிவபெருமானால் அதை கண்டுப்பிடிக்க முடியவில்லை அதனால் கடுங்கோபமடைந்து தன்னுடைய நெற்றிக்கண்ணை திறக்க, இதனால் பூமியின் சமநிலையில் மாறுதல் ஏற்படுகிறது. இது ஆபத்து என்பதால், சேஷநாகம் தன் மூச்சுக்காற்றை விட்டு அந்த தண்ணீரை கொதிக்கும் நீரூற்றாக மாற்றி தொலைந்து போன பார்வதி தேவியின் மணியை கண்டுப்பிடித்து தருகிறது. இதனால் சிவனும் அமைதி அடைந்தார் என்பது புராணம்.

சீக்கியர்களின் நம்பிக்கை என்னவென்றால்,ஒருமுறை குருநானக் அவர்களுடைய சீடர்களுடன் இங்கே வந்துள்ளார். அதில் பாய் மர்தனாவிற்கு பசிக்கவே உணவு ஏதும் இல்லாததால் குரு நானக் மர்தனாவை சீக்கியர்களின் சமையலறைக்கு அனுப்பி உணவு வாங்கி வர சொல்லியிருக்கிறார். அங்கே  வெறும் மாவு மட்டுமே இருந்திருக்கிறது அதை சமைக்க நெருப்பில்லை. அதனால் குரு நானக்கே இந்த நீரூற்றை உருவாக்கி அதில் சாப்பாத்தியை சமைக்க சொல்கிறார். ஆனால் ஒவ்வொரு முறை அதில் சாப்பாத்தியை போடும் போதும் மூழ்கிவிடுகிறது. எனவே குரு நானக் மர்தனாவிடம், சாப்பாத்தி மூழ்காமல் கிடைத்தால் கடவுளின் பேரில் உணவை தானம் செய்வதாக வேண்டிக்கொள் என்று கூறுகிறார். அதன் பிறகு எல்லா சப்பாத்திகளுமே வெந்து மிதக்கிறது. கடவுளின் பெயரில் தானம் செய்தால், நீரூற்றில் மூழ்கிய பொருள் திரும்ப அவர்களிடமே வந்து சேர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

வெந்நீர் ஊற்று ...
வெந்நீர் ஊற்று ...

இக்கோவிலுக்கு வந்து சிவனை வணங்கி விட்டு இங்கே கொடுக்கப்படும் பிரசாதத்தை வாங்கி உண்பதால், அதில் உள்ள கந்தகம் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. உணவுடன் பாத்திரத்தை இந்த நீரூற்றில் வைத்தால் உணவுகள் வெந்துவிடும் அளவிற்கு சூடு இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வந்து சிவனை வணங்குவதால், நாம் செய்த பாவமெல்லாம் அழிந்து போகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் ஆயுள் தானே உயரும்!
வெந்நீர் ஊற்று ...A

இந்த நீரூற்றில் குளிப்பதற்கென்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பகலில் மட்டுமே இங்கு குளிக்க அனுமதியுண்டு. மணிக்கரனை வெயில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை சென்று பார்ப்பது சிறந்ததாகும்.

எனவே,  வாழ்வில் ஒருமுறையாவது இக்கோவிலுக்கு வந்து இந்த அதிசய நீரூற்றில் செய்யப்படும் பிரசாதத்தை சாப்பிடுவது உடலுக்கும், மனதிற்கும் நிச்சயமாக நிம்மதியை கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com