சீதையின் காலடித்தடம் எங்குள்ளது தெரியுமா?

Do you know where Sita's footprints are?
Veerabathrar templeImage credit - astroved.com
Published on

ந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் லேபாக்ஷி என்னும் சிறிய கிராமம் உள்ளது. இங்கே இருக்கும் மிகவும் பிரபலமான வீரபத்திரர் கோவிலின்  பாறையில் உள்ள காலடித்தடம் சீதையின் வலது பாதம் பதிந்த இடம் என்று கருதப்படுகிறது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

சீதையும் ராமரும் வனவாசம் சென்றிருந்தபோது, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயற்சித்தான். அப்போது ஜடாயு என்ற பறவை சீதாதேவியை காப்பதற்காக ராவணனுடன் போரிட்டது. போரில் ராவணன் ஜடாயு பறவையின் இறக்கைகளை வெட்டி விடுகிறான்.

இதனால் அங்கிருந்த பாறையின் மீது சீதை காலடி வைக்க அதிலிருந்து வற்றாது நீர் சுரந்தது. அதை அருந்தி ராமர் வரும்வரை உயிருடன் இருந்து சீதையைப் பற்றிய தகவலை ராமரிடம் சொல்லி ஜடாயு பறவை முக்தியடைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கால் தடத்தினுள் வற்றாது நீர் எப்போதும் சுரந்துக் கொண்டே இருக்கிறது. இந்த நீர் எங்கிருந்து சுரக்கிறது என்பதை விஞ்ஞானபூர்வமாக யாராலும் இன்றுவரை கண்டுப்பிடிக்கவே முடியவில்லை.  கோடைக்காலத்தில் கூட இந்த பாதத்தின் பெருவிரலில் தண்ணீர் வற்றாது நிற்பதைக் காணலாம். இந்த கால் தடம் சுமார் 2 ½ அடி நீளத்துடனும், 1 ½ அடி அகலத்துடனும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் தேத்திர யுகத்தில் மனிதர்கள் மிகவும் உயரமாக இருந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதற்கான சரியான சான்றுகள் கிடையாது. எனினும், இன்னும் சிலர் இந்த காலடித்தடம் அனுமனின் பாதங்கள் என்று நம்புகிறார்கள். லேபாக்ஷி என்பதற்கான அர்த்தம் ‘எழுந்திரு பறவையே’ என்பதாகும். தெலுங்கில் லே என்றால் ‘எழு’ என்றும் பக்ஷி என்றால் ‘பறவை’ என்று பொருளாகும். ஜடாயுவின் நிலைக்கண்ட ராமர் அதை எழுந்திருக்கும்படி கூறியிருப்பார். இதனால்தான் இந்த ஊருக்கு 'லேபாக்ஷி' என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
‘தவறு செய்தால் தண்டனை நிச்சயம்’ என்பதை உணர்த்தும் கோயில்!
Do you know where Sita's footprints are?

வீரபத்திரர் கோவிலில் நிறைய அதிசயங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சொல்ல வேண்டியது தொங்கும் தூண் பற்றி தான். இக்கோவிலில் இருக்கும் 70 தூண்களில் இந்த ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் காற்றில் மிதக்கிறது. இந்த அதிசய நிகழ்வைக்காண பல ஆயிரக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த தூணின் அடியிலே ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் துணியை அல்லது புடவையின் தலைப்பை விட்டு எடுத்தால், செல்வ செழிப்பு பெறுவார்கள் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com