சுயம்பு சிவலிங்கம் ...
சுயம்பு சிவலிங்கம் ...

தினந்தோறும் வளரும் சிவலிங்கம் எங்கே இருக்கு தெரியுமா?

Published on

-ம. வசந்தி

ரிதான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக சிலைகளுக்கு பெயர் போனது தெலுங்கு மண்.  மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ஒன்று ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தெக்காலி என்ற பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் ரவிவாலாசாவில் அமைந்துள்ளது.

அது 55 அடி உயரம் கொண்டது. அதன் மேற்பகுதி மூடப்படாத நிலையில் கோயிலின் அமைப்பும் மேற்கூரை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை இல்லாத காரணத்தால் சிவலிங்கம் எப்பொழுதுமே சூரிய வெளிச்சத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த கடவுள் "எண்டாலா மல்லிகார்ஜூன சுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது மல்லிகார்ஜூனா சுவாமி சூரியனில் இருப்பதாக சொல்லப்படுகிறது

சம்ஸ்தானதேஷா கோயிலை மேற்கூரையுடன் கட்டியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் அடுத்த நாளே அந்த மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது. இவ்வாறு மூன்று முறை நடந்துள்ளதாக தெரிவித்தார். ஒரு நாள் சிவபெருமான் கனவில் தோன்றி நான் தினம் தினம் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால்மேற்கூரை கட்ட வேண்டாம் என்று முடிவெடுத்தனர் இந்த 55 அடி சிவலிங்கத்தை காண .தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை மாசம் மற்றும் மகா சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஸ்தல புராணம்:
இராவண சாமராஜ்யம் அழிக்கப்பட்டு இலங்கை யிலிருந்து அயோத்தியாவுக்கு ஸ்ரீ ராம கடவுள் செல்லும் பொழுது தம்மை பின்பற்றுபவர்களுடன் சுமாஞ்சா மலையில் தங்கினார். அவருடைய குழுவில் இருந்த 'கடவுள்களின் மருத்துவரான' சுசீனா அந்த மலைப்பகுதி முழுவதும் மருத்துவ குணங்கள் மற்றும் மூலிகை செடிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து அம்மலையிலேயே தங்க முடிவெடுத்தார்.

சிவலிங்கம்  கோவில்...
சிவலிங்கம் கோவில்...

இந்த முடிவு குறித்து ஸ்ரீராமனிடம் தெரிவித்து, சுமாஞ்சா மலையில் தான் தவம் புரிய நினைப்பதாக சுசீனா கூறினார். உடனேஸ்ரீராமனும் அவருடைய ஆசையை நிறைவேற்றி அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, தன்னுடைய குடும்பம் மற்றும் தம்மை பின்பற்றுபவர் களுடன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். பின்னர் சுசீனா சுமாஞ்சா மலையில் சிவபெருமானுக்காக கடுமையான தவம் புரிந்தார்.

சிறிது நேரம் கழித்து சுசீனா என்ன செய்கிறார் என்பதை பார்ப்பதற்காக ஸ்ரீராமன் அனுமானை அனுப்பி வைத்தார். அனுமான் சுமாஞ்சா மலை பகுதிக்கு வந்தபோது அவரால் சுசீனாவின் உடலை மட்டுமே பார்க்க முடிந்தது. உடனடியாக சுசீனாவின் உடலை அனுமான் அடக்கம் செய்துவிட்டு, அதன் மீது மல்லிகைப் பூக்களை தூவி அதனை மானின் தோல் கொண்டு மூடினார். இந்த விஷயங்களை ஸ்ரீராமனிடம் தெரிவித்தார். விஷயத்தை கேள்விப்பட்ட ராமன், சீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமானுடன் சுமாஞ்சா மலைக்கு வந்தனர்.

சுசீனாவின் உடலை காட்டுவதற்காக அனுமான் தான் போர்த்தி வைத்திருந்த மானின் தோலை நீக்கினார். அவர் மானின் தோலை நீக்கியவுடன் சுசீனாவின் உடலில் இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. உடனடியாக ஸ்ரீ ராமன் சீதா லட்சுமணன் ஆகியோர் அருகில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு சிவலிங்கத்தை வழிபட துவங்கினர் சிவலிங்கம் சிறிது சிறிதாக வளர்வதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

இதையும் படியுங்கள்:
ஜெயிக்கும் வரை தோற்கலாம் தவறில்லை!
சுயம்பு சிவலிங்கம் ...

பாண்டவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது சீதா குண்டா என்ற அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு அங்கு இருந்த குகையில் தங்கினார் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது. இந்த மலையில் அர்ஜுனா சிவபெருமானுக்காக தவம் புரிந்தார். அர்ஜுனனின் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவர் முன்பு தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உடனே அர்ஜுனன் 'ஓ மல்லிகார்ஜுனேஸ்வரா இந்த இடம் உன்னுடைய பெயரால் பிரபலம் அடைய வேண்டும்.' என்று கூறினார். அதிலிருந்து இந்த கோவில் மல்லிகார்ஜுனா சுவாமி தேவஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

சிவலிங்கம் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாகவும் தினந்தோறும் வளர்ந்து வருவதாக நம்பப்படுவதாலும் மேற்கூரை அமைக்காமல் இருக்கின்றனர். பக்தர்கள் மேலே இருந்து சென்று அபிஷேகம் செய்ய உதவும் அமைப்பு இருப்பது கோவிலின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

சீதம்மா கோனேரு என்று அழைக்கப்படும் புஷ்கரிணியில் நீராடினால் தோல் நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலில் வழிபடப்படும் மூர்த்தி திரேதா யுகத்தைச் சேர்ந்தது என்பது நம்பிக்கையாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com