சுயம்புவாக உருவான 'வாராகி அம்மன்' எங்கிருக்கிறார் தெரியுமா?

Varahi amman
Oldest Varahi amman templeimage Credits: Maalaimalar

லகின் பழமையான சிவன் கோவிலான உத்திரகோசமங்கை கோவில் அருகிலே அமைந்துள்ள ஆதி சுயம்பு வாராகி அம்மனை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

இந்தியாவிலே வாராகி அம்மனுக்கென்று தனி கோவில்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. காசியிலும், தஞ்சாவூரிலும், உத்திரகோசமங்கையிலும் அமைந்துள்ளன. அதிலும் இந்த உத்திரகோசமங்கை வாராகியே மிகவும் பழமையானது என்று கூறுகிறார்கள். இவரையே ஆதிவாராகியம்மன் என்றழைக்கப்படுகிறார். மாணிக்கவாசகர் தன் திருவெண்பாவையில் இந்த வாராகி அம்மனை பற்றி பதிவு செய்துள்ளார். இங்கிருக்கும் வாராகியை ‘மங்கல மஹாகாளியம்மன்’ என்றும் ஆதிவாராகி என்றும் அழைக்கிறார்கள்.

பன்றி முகத்துடன் சிங்க வாகனத்தில் காட்சித்தருபவர் வாராகி அம்மன். இவர் சப்தகன்னிகளுள் ஒருவர். இவர் திருமாலின் வராக அம்சமாக பார்க்கப்படும் அம்மன் ஆவார். இந்த கோவில் வளாகத்தில் நிறைய அம்மிக்கல் இருக்கிறது. அங்கிருக்கும் குளத்தில் நீர் எடுத்து வந்து அம்மிக்கல்லை சுத்தம் செய்துவிட்டு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு பூசிவிட்டு அவரிடம் இருக்கும் மஞ்சளை வாங்கி சாப்பிட்டு தங்கள் வேண்டுதலை வாராகி அம்மனிடம் வைக்கிறார்கள். நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் வாராகி அதை நிறைவேற்றுகிறார். இங்கிருக்கும் குளத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ராமநாதபுரம் வறட்சியாக இருந்தாலும் இந்த குளம் மட்டும் வற்றாமல் காணப்படுகிறது. எல்லா நட்களிலும் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் கருப்பு ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். ஸ்ரீ வாராகி அம்மன் ஆதிபராசக்தியின் படைத்தலைவி. வாராகி அம்மன் துர்கை அல்லது ராஜராஜேஸ்வரி யிடமிருந்து தோன்றியவர். இவர் போர்க்கடவுள் என்பதால், வராகி வழிபாடு வெற்றியை தருவதாக ஐதீகம்.

தோல்விகள்,அவமானம் போன்றவற்றிலிருந்து வராகி வழிப்பாடு காப்பாற்றும் என்பது ஐதீகம். சிலர் தாந்திரீக முறைப்படி வழிப்படுவதால் இவரை இரவு நேரங்களில் தான் வழிப்படுவர் என்கின்றனர். பல வாராகி கோவில்களில் அமாவாசை, பௌர்ணமியன்று தான் பூஜைகள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. கண் திருஷ்டி, பயம் போன்றவற்றை போக்கக்கூடியவர்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி ஏழுமலையானே தனது கடன் பிரச்னை நீங்க வழிபட்ட திருத்தலம் எது தெரியுமா?
Varahi amman

ராஜராஜ சோழன் வாராகி அம்மனை வழிப்பட்ட பிறகே அனைத்து காரியமும் செய்வார். குறிப்பாக போருக்கு செல்லும் முன் வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்த பிறகே போருக்கு செல்வார். அதனால்தான் ஒவ்வொருமுறையும் வெற்றி பெற்றார். வாராகி அம்மன் சோழர்களின் வெற்றி தெய்வமானார். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான வாராகி அம்மன் வேண்டியதை வழங்கக்கூடியவள். விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை தருபவர். இத்தகைய சிறப்புமிக்க கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com