சூரிய கடிகாரம் உள்ள கோவில் எது தெரியுமா?

திருவிசநல்லூர் திருத்தலம்
திருவிசநல்லூர் திருத்தலம்

மிழ்நாட்டில் ஒரு கோவிலில் சூரிய கடிகாரம் உள்ளது. அது எந்த கோவில் என்றால் திருவிசநல்லூர் திருத்தலம்தான். இத்தல இறைவனின் திருநாமம் யோகநந்தீஸ்வரர் என்பதாகும்.

இறைவி பெயர் சௌந்தரநாயகி. இது பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டுக்கு மிகவும் உயர்ந்த திருத்தலமாகும் விளங்குகிறது.

இங்குள்ள இறைவன் யோகநந்தீஸ்வரர் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் இவருடைய லிங்க  திருமேனியில் ஏழு சடைகள் இருக்கின்றன.

பொதுவாக எல்லா கோவில்களிலும் ராஜகோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்த உடன் முதலில் கொடிமரம் இருக்கும். பின்னர் பலிபீடம் நந்தி அமைந்திருக்கும். ஆனால், இந்த கோவிலில் நந்தி முதலில் இருக்கும் மேலும் நந்திதேவர் ஒரு கால் எடுத்து எழுந்த பாவனைகளும் திரும்பி வாசலை பார்த்த நிலையிலும் இருப்பார்.

நாலு பைரவர்கள்
நாலு பைரவர்கள்

இந்த ஆலயத்தில் நாலு பைரவர்கள் ஒரே சன்னதியில் யுகத்துக்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர் கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞானகால பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பதை இவர்களின் திருநாமங்கள்.

இந்த கோவிலின் அம்மன் சன்னதிக்கு எதிரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான சோழர்கால சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது இது யந்திரத்தினால் ஓடும் கடிகாரம் அல்ல. சூரிய ஒளி மூலம் நேரம் காட்டும் கடிகாரம்.

காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும்  பாதையை கணக்கிட்டு இந்த அதிசய கடிகாரத்தை அமைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை அதிகரிக்க உதவும் ஏழு பயனுள்ள யோகா பயிற்சிகள்!
திருவிசநல்லூர் திருத்தலம்

ஒரு அரைவட்ட கோளம் அமைத்து அதை சுற்றிலும் காலை 6 மணி முதல் மாலை ஆறு மணி வரையான எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையாலான ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது . சூரிய ஒளி எந்த எண்ணின் மீது படுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். இது இன்று வரை மிகச் சரியாக நேரம் காட்டிக் கொண்டிருக்கிறது.

அமைவிடம் கும்பகோணம் மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com