
திருக்கோவிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரமாகும். அதுவும் அதிகாலை, நண்பகல் ,உச்சி வேளை அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விசேஷ சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கியுள்ளன கோவில்களில் இந்த மூன்று வேளையில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.
மிகக் கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை இறைவனின் கருவறையில் சுடர் விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை சுத்தமான பசு நெய்யால் ஏற்றினால் இந்த மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியத்தை நிறைவேற்றுமாம்.
இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரியப்போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளி போடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாகும்.
ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் செய்வதை விட ஒரு நெய் தீபம் பல மடங்கு சிறந்தது. எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளைக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.
அகல், எண்ணெய், திரி, சுடர் இவை எல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள். ஆகவே, எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.
அதற்கு ஒரு காரணமும் உண்டு. அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை குடியானவன் ஒருவனால் ஐம்பூதங்களை மண், நெருப்பு, காற்று, ஆகாயம், நீர் கொண்டு செய்யப் படுகிறது.
அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அளவில் அகல் விளக்கை செய்கிறான்.
அப்படிப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறள்.