12 தூண்களும் 12 ராசிகளும் - ஒரு கட்டடக்கலை மேஜிக்!

Sringeri Vidya Shankar Temple
Sringeri Vidya Shankar Temple
Updated on
Deepam
Deepam stripe

கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த வித்யா சங்கர் கோவில். 14 ஆம் நூற்றாண்டில் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட கோவில். 12 ராசி தூண்கள் உடன் சூரிய கடிகாரம் செயல்படும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது சிறப்பானதாகும். இது சிருங்கேரி சாரதா பீடத்தில் ஒரு பகுதியாகும். இக்கோவில் முழுக்க முழுக்க கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

12 ராசி தூண்களிலும் அந்தந்த மாதங்களில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இது வானியல் அறிவின் உச்சமாக பார்க்கப்படுகிறது. வித்யா சங்கர் நினைவாக வித்யா ரன்னியர் என்பவர் என்ற துறவியால் கட்டப்பட்டது இந்த கோவில்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் சாரதா கோயில் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள சாரதா தேவி கோவில் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பாக நடைபெறும். போஸ்னர் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

வித்தியா சங்கர் கிபி 1228 ல் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக பட்டம் சூட்டினார். கிபி 1333இல் ஜீவசமாதி அடைந்தார். நூறு ஆண்டுகளுக்கு மேலாக மடத்தில் தொண்டாற்றியுள்ளார். அவர் லும்பிகா யோக நிலையில் இருக்கும்போது ஜீவசமாதி அடைந்தார். நிலவரை ஒன்றில் இறங்கி தியான நிலையில் இருக்கப் போவதாகவும் 12 ஆண்டுகள் கழித்து பார்த்தால் நான் லிங்க வடிவில் இருப்பேன் எனவும் சொன்னார். அதன்படியே நிலவரையில் இறங்கி தியானம் செய்தார். ஆனால் அவரது சீடர்கள் ஆர்வக்கோளாறு காரணமக மூன்று ஆண்டுகள் கழித்து பார்த்தபோது, அவர் லிங்க வடிவில் காணப்பட்டார்.

இந்த கோவில் தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு வாயில் சரஸ்வதிக்கும் மேற்கு வாயில் லட்சுமி நாராயணருக்கும் வடக்கு வாயில் உமா மகேஸ்வரிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் வெளி சுவர்களில் ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. திருமாலின் பத்து அவதாரங்கள் மற்றும் சிவன் சக்தி ஆகிய வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. கட்டடக்கலைக்கு மிகவும் பெயர் பெற்ற கோவிலாக உள்ளது. இந்தப் கோவில் (Sringeri Vidya Shankar Temple) ஆன்மீகத்தின் புகலிடமாகவும் வானிலை கட்டிடக்கலை இவற்றிற்கு சான்றாகவும் விளங்கி வருகிறது. 12 தூண்கள் சூழப்பட்டு அமைந்துள்ளது. கந்தர்வர்கள் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கோவில் மேலிருந்து கீழே தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள் கண்ணைக் கவர்கின்றன.

சிலைகளில், சிங்கத்தில் அமர்ந்திருக்கும் வீரன், கருங்கல்லால் ஆன உருளை பந்துகள் காணப்படுகின்றன. இந்த கோவிலுக்கு ஆறு வாசல்கள். சாரதாம்பாளுக்கு சந்தனத்தினால் ஆன சிலை கண்ணை கவரும் விதத்தில் உள்ளது. சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இதையும் படியுங்கள்:
குதிரை மேல் வரும் காவல் தெய்வம்! ஊர் மக்களை காக்கும் தேரடி கருப்பர் கோவில்கள்!
Sringeri Vidya Shankar Temple

அந்தக் காலத்தில் காஷ்மீர் பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி ஆகும். சிருங்கேரி மடத்தின் முதல் மடாதிபதியாக சுரேஷ்வரர் என்பவரை சங்கர் நியமித்தார். இவர்கள் ஆதிசங்கராவின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள். கட்டடக்கலைக்கும் சிற்பக் கலைக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com