உலகளந்த பெருமாள் கோயில் சிறப்புகள்- காஞ்சிபுரம்!

உலகளந்த பெருமாள் கோயில் ...
உலகளந்த பெருமாள் கோயில் ...

-மரிய சாரா

மிழ்நாட்டில், கோயில் நகரமான காஞ்சியில் உலகளந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்து மதக் கடவுளும் வைணவ சமயத்தின் முழு முதற் கடவுளுமான விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு என்ற சொல்லுக்கு 'எங்கும் நிறைந்திருப்பவர்' என்று பொருள். வைணவ சமயத்தின் நம்பிக்கையின்படி, பரப்பிரம்மமாய் விளங்கும் விஷ்ணு, உலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்துள்ளார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி அவர் இதுவரை எடுத்த 9 அவதாரங்களில் ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக் கனவாகும். பிறப்பும் இறப்பும், இல்லாத பரம்பொருளான இவரை, பரப்பிரம்மா, பரமாத்மா என சொல்வதுண்டு. விஷ்ணுவின் வாகனம் கருட வாகனம் ஆகும்.

காஞ்சிபுரத்தில் விஷ்ணுவிற்காக அமைந்திருக்கும் உலகளந்த பெருமாள் திருக்கோயில், 6-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதாகும்.

பெரிய காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகிலேயே இந்த உலகளந்த பெருமாள் கோயிலும் உள்ளது. நான்கு திவ்ய தேசங்களாக திருக்கரவணம், திருக்கரகம், திருநீரகம் மற்றும் திருஉரகம் ஆகியவை ஆலய வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கடைசியில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

உலகளந்த பெருமாள்...
உலகளந்த பெருமாள்...

மன்னன் மகாபலியின் பெருமையை அடக்க, உலகளந்த பெருமாள் என்ற தோற்றத்தில் மன்னன் மகாபலி மற்றும் ஆழ்வார்களின் முன் இங்கு தோன்றியதாகக் கூறப் படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆறு முறை பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு சித்திரையின்போதும் இந்தத் திருக்கோயிலின் தேர்த்திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்தத் திருக்கோயிலில் பல்லவர்கள் , சோழர்கள் மற்றும் சம்புவராயர் போன்ற மேலும் பல மன்னர் வம்சங்களின் 15 கல்வெட்டுகள் உள்ளன. அனைத்து கல்வெட்டுகளும், மன்னர்கள் கோயிலுக்குப் பரிசாக வழங்கிய பொருட்களை விவரிக்கின்றன.

காஞ்சி மாநகரின் மையத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் சுமார் 60,000 சதுர அடி (5,600 மீ 2) பரப்பளவைக் கொண்டதாகும். இந்தத் திருக்கோயிலின் தீர்த்தக் குளமான, நாக தீர்த்தக் குளம் பிரதான கோயில் வளாகத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!
உலகளந்த பெருமாள் கோயில் ...

இதன் ராஜகோபுரம் 7 கலசங்களுடன் கூடிய மூன்று அடுக்குகளைக் கொண்டது. இந்தக் கோயிலின் நாயகரான உலகளந்த பெருமாளின் உருவம் 35 அடி (11 மீ) உயரத்திற்கு மேல். அவரது இடது கால் உடலுக்கு நேர் கோணத்திலும், தரைக்கு இணையாகவும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்ட உருவமானது, மகாபலியின் தலையில் வலது கால் வைத்தும், இடது கையின் இரண்டு விரல்கள் நீட்டிய நிலையிலும் அமைந்துள்ளது.

நாள்தோறும் ஆறு முறை காலை  7  மணிக்கு உஷத்காலம், 8:00 மணிக்கு காலசாந்தி, மதியம் 12:00 மணிக்கு உச்சிகாலம், மாலை 6:00 மணிக்கு சாயரக்சை, இரவு 7:00 மணிக்கு இரண்டம்காலம் , இரவு 10:00 மணிக்கு அர்த்த ஜாமம் என கோயில் சடங்குகள் நடைபெறுகின்றன. இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com