இன்னல்கள் தீர்க்கும் இடுக்கு பிள்ளையார்..!

இடுக்கு பிள்ளையார்
இடுக்கு பிள்ளையார்

திருவண்ணாமலை என்றாலே நினைவுக்கு வருவது அருணாச்சலேஸ்வரர் கோவில்தான். இது சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களுள் ஒன்றாகும். காற்று, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதத்தில் நெருப்பை கொண்டிருக்கும் அக்னி ஸ்தலமாகும். இது உலகிலேயே சிவபெருமானுக்காக அர்பணிக்கப்பட்ட பழமையான கோவிலாகும். அருணா என்றால் ‘சிவப்பு’ என்றும் அச்சலா என்றால் ‘அசையாமல்’ என்றும் பொருள். திருவண்ணாமலையில் கிரிவலம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வந்து கிரிவலம் சென்று சிவனை தரிசித்துவிட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலையை சுற்றி கிரிவலப்பாதை மொத்தம் 14 கிலோ மீட்டர் ஆகும்.

கிரிவலம் செல்லும் பாதையில் அமைந்துள்ள கோவில்தான் இடுக்கு பிள்ளையார் கோவிலாகும். இந்த கோவில் குபேரன் கோவிலுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருந்தாலும், பக்தர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வழியாக கிரிவலம் வரும் பக்தர்கள் கண்டிப்பாக இடுக்கு பிள்ளையார் கோவிலில் நுழையாமல் போக மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
முழு மனதோடு செய்யும் எந்த செயலும் வெற்றியைத் தரும்!
இடுக்கு பிள்ளையார்

இந்த கோவிலில் பிள்ளையாருக்கென்று சிலைகள் எதுவும் இல்லை. இக்கோவில் மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. பின்வாசல் வழியாக நுழைந்து, நடுவழியைத் தாண்டி பின்பு முன்வாசல் வழியாக வர வேண்டும். இக்கோவில் மிகவும் குறுகலான பாதையை கொண்டிருக்கிறது. இந்த பிள்ளையார் கோவிலில் நந்தி இருப்பது ஆச்சர்யமான விஷயமாகும். இக்கோவிலின் உள்ளே செல்ல படுத்து தவழ்ந்து மெதுவாகவே சென்று வர வேண்டும்.

இக்கோவில் சற்று குறுகலாக இருப்பதால், உடல் பருமன் உள்ளவர்கள் சென்று வருவதற்கு கடினமாக இருக்கும் என்று தோன்றினாலும் அனைவருமே சற்று முயற்சித்தால் உள்ளே சென்று வந்துவிட முடிகிறது. எப்பேர்ப்பட்ட உடல் பருமனானவர்களும் உள்ளே நுழைந்தால், இக்கோவில் இளகி வழிவிடும் என்று நம்பப்படுகிறது. அதுபோல கிரிவலம் சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதனுள் சென்று வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

 இடுக்கு பிள்ளையார்
இடுக்கு பிள்ளையார்

இக்கோவிலில் உள்நுழைந்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பில்லி, சூன்யம் அழியும். உடல் வலி, நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எனவே திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போது மறக்காமல் இடுக்கு பிள்ளையாரை தரிசித்துவிட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com