
தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். மஞ்சுநாதா சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். கர்நாடக மாநிலம் தெற்கு கன்னடாவில் தர்மஸ்தலா என்ற இடத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த இடம் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஆக உள்ளது. இந்த கோவிலில் மூலவர் மஞ்சுநாதர் மற்றும் எட்டாவது தீர்த்தங்கரர் சந்திர பிரபாவும், கோவிலின் காவல் தெய்வமாக குமாரசாமி மற்றும் கன்னியாகுமரி என்ற யட்சிணியும் உள்ளார்கள்.
தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தை சமண சமய வீர மன்னா பெர்கடே குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். கோவில் பூஜையை வைண அந்தணர்கள் செய்து வருகின்றனர். ஜைனமத குடும்பத்தார்கள் தற்போது நிர்வாகம் செய்து வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நேத்ராவதி நதிக்கரையில் அமைந்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் வைணவத் துறவியால் புதுப்பிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 'தலாய்லாமா மடம்' என சொல்லப்படுகிறது. இங்கு மஞ்சுநாதா என்ற சிவனும் மற்றும் 39 அடி உயரமுள்ள பாகுபலி சிலை, மஞ்சுஷா அருங்காட்சியகம், நேத்ராவதி நதி ராம் மந்திர், சந்தரநாத் சாமி கோவில் போன்றவை முக்கிய இடங்களாகும். மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நவம்பர், டிசம்பர் மாதத்தில் விளக்கு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். மங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி பார்க்கலாம்.
இந்த அன்னபூர்ணா சத்திரத்தில் தினசரி விதவிதமான உணவுகள் வழங்கப்படுகிறது. இது மிகவும் சுவையாகவும், வாய்க்கு ருசியாகவும் உள்ள உணவுகள் இங்கு தயார் செய்து வழங்கப்படுகிறது. இந்த இடத்தில் நீச்சல் குளம் ஸ்பா போன்ற வசதிகள் உள்ளன.
இங்கு பல வகையான கார்களை காணலாம். பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பலவகையான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இங்கு இல்லாத கார்களே இல்லை எனலாம். தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது தர்மஸ்தலாவுக்கு முன்பு உள்ளது. பாகுபலி மலை உச்சியில் ஏறுவது புதிய அனுபவமாக இருக்கும். பிரார்த்தனை தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. இங்கிருந்து பார்த்தால் இயற்கை காட்சிகளை காணலாம். கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதன் அருகில் உள்ள ஏரியில் நீராடி மகிழலாம். உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
தர்மஸ்தலாவுக்கு அருகில் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இந்தப் பகுதி ராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். 927 ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவில் குளத்தால் சூழப்பட்டது. இங்கிருந்து மூணு கிலோ மீட்டர் தொலைவில் மஞ்சுநாதா கோவில் உள்ளது.
தர்மஸ்தலாவுக்கு மிக அருகில் உள்ளது. சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும். இந்தக் கோவில் வளாகம் மிகப் பெரிய அளவில் இருக்கும். இங்கு தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
தர்மஸ்தலாவில் உள்ள மிகப்பெரிய ஆறு எனலாம். இந்த ஆற்றில் படகு சவாரி செய்வது புதிய அனுபவமாக இருக்கும். ஆற்றின் கரையில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்த இடத்தில் ஏராளமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இந்த இடத்தில் மீன் பிடித்தல் காண்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை நகரமாகும். சரஸ்வதி தேவி அவதாரமாக சாரதாம்பாள் கோவில் உள்ளது. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வித்யாரன்னியம் சுவாமியால் கட்டப்பட்ட கோவிலாகும்.
இதுவும் தர்மஸ்தலாவில் உள்ள ஒரு கோவில் ஆகும். சிறந்த சுற்றுலா ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்கு ஏராளமான சிற்பங்கள் ஓவியங்கள் காணப்படுகிறது. இங்குள்ள தோட்டம் கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது சுற்றுலா பயணிகளுக்கு விருந்தளிக்கும் விதத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.
இதுவும் தர்மசாலாவில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம் ஆகும். தர்மசாலாவில் இருந்து அரை மணி நேரத்தில் இந்த இடத்திற்கு செல்லலாம். இந்த இடத்தில் இரண்டு அழகியத் தேர்கள் மிகுந்த வேலைபாடுகளுடன் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வது சிறந்த அனுபவமாக இருக்கும்.
இந்தக் கோவிலில் பெரிய அளவில் விநாயகர் சிலை உள்ளது. மகா கணபதி என அழைக்கப்படுகிறார். திறந்தவெளியில் விநாயகர் காட்சி தருகிறார் . இந்த இடம் புனித யாத்திரை ஸ்தலமாகும். பெலா தங்கடி தாலுகாவில் உள்ளது.
தர்மஸ்தலா சுற்றுலாவில் மேற்கண்ட அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். சுற்றிலும் எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சிகளும் பறவைகளின் ரிங்காரமும் ஒலித்துக் கொண்டு இருக்கும். இங்கு சென்று வருவது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.