வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக…! இல்லத்தில் செய்ய வேண்டியவைகள்!

லட்சுமி கடாட்சம் பெருக...
லட்சுமி கடாட்சம் பெருக...

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லி மரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லஷ்மி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது‌. நெல்லி மரம்  இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும் எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது.

நாள்தோறும் துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மூன்று முறை வலம் வர வேண்டும்.

வீடுகளில் காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும் மாலை வேளைகளில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வ செழிப்பு தாமாகவே வந்து விடும்.

சுக்களுக்கு ஒரு பழம் வாங்கி கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் என்னும்போது அவற்றிற்கு தீவனங்கள் வாங்கித் தந்து போஷித்தால்  எவ்வளவு புண்ணியம். பசுக்களிடம் குபேரன் குடி கொண்டிருக்கிறான். கோமாதா பூஜை, குபேர பூஜைக்கு சமம்.

ங்கு, நெல்லிக்காய், பசுசாணம் கோஜலம், தாமரை பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம் காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம் இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.

நாள்தோறும் விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கு ஏற்றுவது இன்னும் சிறப்பு மாலை 6 மணிக்கு திருவிளக்கு ஏற்றி விட வேண்டும்.

வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும் தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.

விளக்கேற்றிய பிறகு பால், தயிர் ,உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு கொடுக்க கூடாது.

கோலம் போடும் வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் போடுவது அவசியம்.

அழகிய கோலம்...
அழகிய கோலம்...

ருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசப்படியில் நின்று கொடுக்கக்கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும். அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்க வேண்டும்.

விளக்கேற்றுவது போல் தினமும் ஊதுபத்தி கொளுத்துவதும் சாம்பிராணி போடுவது மிகவும் முக்கியம்.

தினமும் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு அன்னதானம் செய்ய என்று போட்டால் தான் லட்சுமி கடாட்சம் உண்டாகும். லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்.

ண்டை போடும் வீடுகளில் லட்சுமி தங்கவே மாட்டாள். அதனால் வீட்டில் சண்டை போடக்கூடாது.

இதையும் படியுங்கள்:
சிவப்பு கொய்யாபழத்தில் உள்ள நன்மைகள் தெரியுமா?
லட்சுமி கடாட்சம் பெருக...

காலை மாலை விளக்கேற்றும் பொழுது தொலைக் காட்சிகளை ஓட விட்டு அதில் வரும் தொடர்களை  பார்க்கக்கூடாது. அதில் வரும் அமங்கலமான சொற்களினாலும் அழுகையினாலும் வீட்டில் லட்சுமி தங்காமல் ஓடி விடுவாள்.

டவுள் திருவுருவப்படத்திற்கு மலர் அலங்காரம் வாசமுள்ள மலர்களால் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். அதில் காவி இடுவதனால் மகாலட்சுமி தங்குவாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com