சோழ நாட்டிலிருந்து காசிக்கு வந்து வசித்து வந்த விஷ்ணு சர்மா எனும் முதல் சீடரை சங்கரர் அங்கு அடைந்தார். அவரை துறவேற்க செய்து அவருக்கு "சுநந்தனர்" எனும் பெயரை சூட்டினார். சிறிது காலத்தில் மேலும் பல சீடர்கள் சேர்ந்தனர்.ஆனால், சங்கரர், சுநந்தனரிடம் அதிக அன்புடனும் ஆதரவுடனும் இருப்பது மற்ற சீடர்களுக்கு பிடிக்கவில்லை.இதை அறிந்த சங்கரர், சுநந்தனரின் தனிப்பட்ட பெருமையை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல எண்ணினார்.ஒருநாள் நீராட தன் சீடர்களுடன் கங்கைக்கு சென்ற சங்கரர், நீராடியபின் உடுத்த வேண்டிய துறவற உடையுடன் சுநந்நனர் கங்கையின் மறுகரையில் இருப்பதைக் கண்டார்.கங்கையில் பெருவெள்ளம் பொங்கும் காலம் அது. உரத்த குரலில் சுநந்தனரை அழைத்தார் சங்கரர். குருவின் அழைப்பைக் கேட்டவர்... அப்படியே திரும்பி கங்கையின் வெள்ளத்தில் காலை வைத்தார்.என்ன ஆச்சரியம்!அவர் கங்கையின் நீர்ப்பரப்பில் நடக்க ஆரம்பித்தார். அவர் வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கீழே ஒரு பெரிய தாமரை முளைத்து எழுந்து அவர் பாதங்களைத் தாங்கியது.அதுமுதல் அவர் பத்மபாதர் (தாமரைக் கால் உடையவர்) என அழைக்கப்பட்டார்.இந்த இடத்தில் வேறு இரு சீடர்களைப் பற்றியும் குறிப்பிடலாம்.பிரபாகரர் எனும் ஒருவர் வாய் பேசாமல் இருந்த தன் மகனை சங்கரரிடம் அழைத்து வந்தார். சங்கரரின் அருளால் அவன் பேசத் தொடங்கி விடுவான் என எண்ணினார்.சங்கரர் அவனைப் பார்த்து, "நீ யார்?" என்றார்.உடன் அந்தச் சிறுவன், "மனத்தின் சார்புடனும், ஐம்புலன்களின் சார்போடும் அமைந்து இயங்கும் பல்வேறு விஷயங்களுக்கும் அப்பாற்பட்ட ...அவற்றில் ஒன்றோ என்ற குழப்பம் அடைந்த ஆத்மாவே நான்" என விடையளித்தான்.இதை அவன் பல செய்யுள்கள் மூலம் சொன்னான்(ர்). ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் "என்றும் நிலையாய் உள்ள நான் எனும் பிரக்ஞை மயமாகவே உணரப்படும் ஆத்மாவே நான் "என உறுதிப்பட எடுத்துரைத்தார்.(ஸநித்யோபலப்தி ஸ்ரூபோஹம் ஆத்மா)குருநாதரான சங்கரர் மகிழ்ந்து, அவருக்கு ‘ஹஸ்தாமலகர்’ என்ற பெயரைச் சூட்டி அவரை தன் சீடராக ஏற்றார்.‘ஹஸ்தாமலகர்’ என்றால் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிந்த அறிவுடையவர் என்று பொருள்.இது நடந்த இடம் ‘ஸ்ரீபலிபுரம்’ என்றும், அப்போது அந்த சீடருக்கு பதின்மூன்று வயது என்றும் மாதவீய சங்கர விஜயம் கூறுகிறது.ஹஸ்தாமலகர் கூறிய செய்யுள்களுக்கு சங்கர பகவத் பாதர் விரிவுரை எழுதியுள்ளார்.இதே காலத்தில்தான் ‘காலநாதர்’ எனும் ஒருவரும் சங்கரருக்கு சீடரானார்."தோடகாச்சாரியார்" எனப்படுபவர். இசை உள்ள சந்தப் பாட்டுகளாகத் ‘தோடகம்’ என்ற விருத்தப்பாவில் தன் குருநாதரைப் புகழ்ந்து பாடியதால் அப்பெயர் பெற்றார்.அவரது பாடல்களின் பல்லவியும் முடிவும் "குருநாதா எனக்கு நீங்களே புகலிடம் ஆகுக"..(பவசங்கர தேசிகமே சரணம்) என்றே அமைந்திருக்கும்.ஒருநாள் சங்கரர் தன் சீடர்களுடன் கங்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தர. சற்றுத் தொலைவில் ஒருவன் நான்கு வேட்டை நாய்களுடன் அவரை நோக்கி வருவதைப் பார்த்தார். உடன் சங்கரர் அவனைப் பார்த்து, "விலகிப் போ... விலகிப் போ..."என்றார்.அதற்கு அவன், "எதைவிட்டு விலகச் சொல்கிறாய்? பூத உடலை விலகச் சொல்கிறாயா? அல்லது ஆத்மாவை விலகச் சொல்கிறாயா? பூத உடலைச் சொல்வதானால்... அது அர்த்தமற்றது. ஏனெனில்... ஊன் உடல்கள் எல்லாமே ரத்தம், சீழ்,எலும்பு,சதை போன்ற பொருள்களால் ஆனது. ஆகவே , எதற்காக ஒரு உடல் மற்றொரு உடலை விட்டு தூர விலக வேண்டும்?ஆத்மாவை விலகச் சொல்வதானால்... அது நடக்காத செயல்... ஏனெனில்... அது எப்படி விலக முடியும்? எதை விட்டு எங்கு விலகும்? அதுதானே எல்லாமாய் எங்கும் இருப்பது. அது சோற்ரால் அமைந்த ஒரு ஊனுடல்...மற்றொரு சோற்றால் அமைந்த ஊனுடலிலிருந்து விலகுவதா? ஏன்? ஏதற்காக? அல்லது ஒரு உள்ளுணர்வு... மற்றொரு உள்ளுணர்வை விட்டு விலகுவதா? எதை விலகச் சொல்கிறாய்?"என்றான்.அவன்... ஆத்மா யாவற்றையும் கடந்து நின்று... அனைத்துமாய் நிற்கும் உண்மை நிலையை மேலும் விளக்கினான்.இயல்பான ஆனந்தமும் உணர்வும் நிறைந்த கடல்போல அலையின்றி தேங்கிக் கிடக்கும் உள்ளுணர்வான உண்மையில்... இவன் அந்தணன்... இவன் நாயைத் தின்னும் கீழானவன் என ஏற்படும் இந்த வேறுபாட்டுப் பிரமை-ஏமாற்றம்-மாயை எத்தனை பெரியது? கங்கையில் பிரதிபலிக்கும் சூரியனுக்கும்... குட்டையில் பிரதிபலிக்கும் சூரியனுக்கும் வேற்றுமை உண்டா? ஒரு தங்கக் கிண்ணத்தின் நடுவே உள்ள வெற்றிடத்திற்கும்... ஒரு மண் குடத்திற்குள் இருக்கும் வெற்றிடத்திற்கும் வேற்றுமை உண்டா?"என்றவன் மேலும் சொன்னான்.(தொடரும்)