சுண்ணாம்பு குகை அற்புதம்!

சுண்ணாம்பு குகை அற்புதம்!
Published on

மேகாலாயாவில் உள்ள சிரபுஞ்சி அருகே மவ்ச்மை குகை (Mawsmai Caves) உள்ளது. இதன் நீளம் 150 மீட்டர். பூமிக்கடியில்  இயற்கையின் கைவண்ணத்தில் சுண்ணாம்புக் கற்களாலான,அழகிய வித்தியாசமான உருவங்களை தன்னுள் மறைத்துக் கொண்டுள்ளது. குனிந்து நடந்து செல்லும் போது நம் மீது விழும் நீர் துளிகள் ஒரு சிலிர்பை ஏற்படுத்தும்.

…………………………………………

தோகை இள மயில் ஆடி வரும்!

எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு சிறிய மலை இருப்பதால் அடிக்கடி அங்கிருந்து நிறைய மயில்கள் வரும்.. அவைகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் நீர் வைப்பேன். அதை குடிக்க வந்த மயிலை எடுத்த போட்டோ. அதுவும் தைப்பூசத்தன்று…

………………………………………..

பனி விழும் மலர் வனம்!

பனி விழும் மலர் வனம் என்ற இனிய பாடலை நினைவு படுத்தும் வண்ணம் , ஊட்டியில் நாங்கள் தங்கி இருந்த போது பனி படர்ந்த காலை நேரத்தில் இயற்கை அன்னையின்  அழகை ரசித்துப் பார்த்து பிரமித்தேன்…மழையும் அழகு,பனியும் அழகு,வெய்யிலும் அழகு என இயற்கையின் படைப்பை என்று எண்ணி மகிழ்ந்தேன்.

…………………………………………

கிளிகொஞ்சும் போட் பிளவர்ஸ்!

இயற்கையின் அற்புதங்களில் வாசமிகு வண்ணமலர்களின் பங்கு ஏராளம். தனது நறுமணத்தாலும், அழகிய வண்ணங்களாலும் ,வித்தியாசமான வடிவிலும் நம்மை பிரமிக்க வைக்கும்.

அப்படி நான் பார்த்து மயங்கியது (Parrot Flower) பேரட் பிளவர் தான். கிளிகள் ஒரு கொம்பில் வரிசையாக பல வண்ணத்தில் அமர்ந்து உள்ளது போன்ற தோற்றம் அதிசயமே…

– பானு பெரியதம்பி, சேலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com