இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே சமயம் சில வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
-இதுகுறித்து தமிழக போலீசார் தரப்பில் கூறியதாவது:
விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதே போல, விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். சென்னையில் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
– இவ்வாறு தெரிவித்தனர்.