கம்பங்கூழ் அருந்தி ஒரு வம்சத்துக்கே அடிமையான சுவாமி ஐயப்பன்!

Swami ayyappan History
Swami ayyappan HistoryImage Credits: Pinterest
Published on

பரிமலை ஐயப்பன் கோயில் வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறந்திருக்கும். கடுமையான விரதம் இருந்து, கல்லையும், முல்லையும் காலுக்கு மெத்தையக்கி, லட்சக்கணக்கான பக்தர்கள் பதினெட்டுப் படிகள் ஏறிச்சென்று ஐயப்பனை தரிசிக்கும் அந்த ஒரு நொடிதான் ஐயப்ப பக்தர்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷமாகும்.

ஐயப்ப சுவாமி ஒரு வம்சத்திற்கே அடிமையான கதை தெரியுமா? ‘நீங்கள் என்னை நினைத்து என்ன வேண்டினாலும் அதை உங்களுக்குத் தந்து அருள்வேன்’ என்று அருள்புரிந்த கதையைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

‘மகிஷி’ என்னும் அரக்கியை வதம் செய்வதற்காக சிவன் மற்றும் விஷ்ணுவின் கலவையாக அவதரித்தவர்தான் சுவாமி ஐயப்பன். தன்னுடைய அன்னைக்காக புலி பால் எடுத்து வர சுவாமி ஐயப்பன் காட்டுக்குச் சென்றார்.

காட்டுக்குப் போன அவருக்கு  பசியும், களைப்பும் மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது அந்தக் காட்டிற்குள் ஒரு குடிசையை காண்கிறார். அந்த வீட்டில் உள்ள தம்பதியினர் அந்த வழியாகப் போகும் வழிப்போக்கர்களுக்கு தினமும் உணவளித்து மகிழ்வது வழக்கம்.

ஏழைகளாக இருந்தாலும் தன்னுடைய இல்லம் தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அன்னம் இடுபவர்கள் அவர்கள். ஐயப்பனும் அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார். அவர்கள் ஐயப்பனையும் வரவேற்று உணவளிக்க முடிவு செய்கின்றனர். அன்று அவர்கள் வீட்டில் கம்பு தானியம்தான் இருக்கிறது. அதை வைத்து கம்பங்கூழ் செய்து ஐயப்பனுக்குத் தருகிறார்கள். அவர்களின் அன்பிலும் தொண்டிலும் மிகவும் மகிழ்ந்த ஐயப்பன், தான் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, வேண்டும் வரத்தை கேட்கச் சொல்கிறார்.

பகவானே தங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்திய பிறகு வேறென்ன வேண்டும்? எப்போதும் பக்தி நிலையில் இருந்து மாறாமல் இருக்க அருள் புரியும்படி அவர்கள் வேண்டினர். இதனால் மிகவும் மகிழ்ச்சியுற்ற ஐயப்பன், ‘நீங்கள் தந்த கம்பங்கூழுக்கு மட்டுமல்ல, உங்கள் அன்பிற்கும் நான் என்றென்றும் அடிமை. நீங்கள் என்னை நினைத்து வேண்டி எதைக் கேட்டாலும் தந்தருள்வேன்’ என்று வரமளித்தார் ஐயப்பன்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ கிருஷ்ணரைக் காண சிவபெருமான் பெண்ணாக மாறியக் கதை தெரியுமா?
Swami ayyappan History

அன்று முதல் அந்தத் தம்பதியினரின் வம்சம், ‘கம்பங்குடி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள். இதுதான் சுவாமி ஐயப்பன் அன்பால் ஒரு வம்சத்திற்கு அடிமையான கதை.

ஐயப்பன் அருள்பெற்ற அந்தத் தம்பதியினர் வாழ்ந்தது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கள்ளிடைக்குறிச்சிக்கு அருகேயுள்ள கரந்தையார்பாளையம். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கம்பங்குடி மூதாதையர்கள் கள்ளிடைக்குறிச்சியில்தான் இருந்தார்கள். சுவாமி ஐயப்பன் கம்பங்குடி வம்சத்திற்கு மட்டுமல்ல, உண்மையான அன்பை அவர் மீது யார் வைத்தாலும் அவர்களுக்கு அன்பால் அடிமையாக இருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com