காண்போரை வியக்க வைக்கும் காஞ்சி கைலாசநாதர் கோவில்!

காஞ்சி கைலாசநாதர் கோவில்...
காஞ்சி கைலாசநாதர் கோவில்...

ந்தியாவில் உள்ள முக்கியமான சிறப்புகளில் ஒன்று கோவில்கள் ஆகும். மக்கள் கோவில்களுக்கு மனநிம்மதி பெறவும் தனது பாவங்களை தீர்க்கவும் கடவுளைக் காணவும் செல்கிறார்கள் என்றாலும் சில கோவில்களின் கட்டிடக்கலையின் அழகு மனதை மெய் மறக்க வைக்கிறது என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று நான் காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவில்.

காஞ்சிபுரத்திலிருக்கும் கைலாசநாதர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இக்கோவிலை 7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜசிம்மன் கட்டினார். அவரின் மறைவிற்கு பிறகு அவருடைய மகனான மகேந்திரவர்மன்தான் காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டிமுடித்தார் என்று சொல்லப்படுகிறது. இக்கோவில் 5000 வருடம் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் கட்டிட அமைப்பு திராவிட கட்டிடக் கலையை பறைசாற்றுவதாக உள்ளது.  இங்குள்ள ஓவியங்கள் அஜந்தா குகையில் உள்ள ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கைலாசநாதர் கோவில்...
கைலாசநாதர் கோவில்...

மற்ற கோவில்களை போல இந்த கோவிலின் பிரகாரத்தை சுற்றி வர முடியாது. பிரகாரத்தை சுற்றி வர சிறிய துவாரமே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை விட பிரகாரத்தை சுற்றிவிட்டு வேளியே வருவதற்கு அதை விட சிறிய துவாரமே இருக்கிறது. இதை பிறப்பு முதல் இறப்பு வரை என்று குறிப்பிடுகிறார்கள். இந்த பிரகாரத்தை சுற்றி வருவது தாயினுடைய கருவறைக்குள் சென்று வாழ்ந்துவிட்டு வருவதற்கு சமம் என்று கூறுகிறார்கள். இக்கோவிலை ‘தென்திசை கைலாயம்’ என்று அழைப்பார்கள்.

இக்கோவிலில் 1300 வருடங்களுக்கு மேலாக வழிபாடு நடந்து வருகிறது. கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள சிற்பங்களை இந்திய தொல்லியல்துறை பராமரித்து வருகிறது. கோவிலை சுற்றி நிறைய சிறுகோவில்கள் உள்ளது அதை ‘திருசுற்று மாளிகை’ என்று அழைக்கிறார்கள். இங்கே நிறைய சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன. ராஜசிம்மன் இக்கோவிலுக்கு வைத்த பெயர் ஸ்ரீ ராஜசிம்ம பல்லவேஸ்வரம். பிற்காலத்தில் இக்கோவில் ‘கைலாசநாதர் கோவில்’ என்று மாறிவிட்டது.

கைலாசநாதர் கோவில்
கைலாசநாதர் கோவில்

ராஜசிம்மன் இக்கோவிலின் பணியில் தான் மட்டும் ஈடுபடாமல் தன் மனைவியையும், மகனையும் சேர்த்து ஈடுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜராஜ சோழன் ஒருமுறை காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு சென்றபோது இக்கோவிலின் கட்டிடக்கலையை பார்த்து வியந்து போனாராம்.

இக்கோவிலின் வெளிப்புரத்தில் யாழி சிலைகள் உள்ளன, அதன் மீது அமர்ந்திருக்கும் வீரனின் முகம் ஒவ்வொரு சிலைக்கும் மாறுப்படுகிறது என்பது வியப்பாக உள்ளது. கோவில் முழுவதும் சிம்ம யாழிகள் இருப்பதற்கான காரணம், ராஜசிம்மன் போரிலே சிங்கம் போன்றவர் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவேயாகும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் அதிசயம் இந்த கருப்பு நாரைகள்! 
காஞ்சி கைலாசநாதர் கோவில்...

கைலாசநாதர் கோவிலில் உள்ள சிவலிங்கம் 10அடி உயரம் கொண்டது. போர்க்காலங்களில் இக்கோவில் சரணாலயம் போல பயன்பட்டது இக்கோவிலில் தப்பிப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் அது தற்போதும் கோவிலுள் இருக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள். இக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட சன்னதிகள் உள்ளது. இங்கே வந்து சிவனை வணங்கிவிட்டு சென்றால் ராகுவினால் பாதிப்புகள் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. இக்கோவிவில் உள்ள கற்பகிரகத்தை சுற்றிவந்தால் நிச்சயமாக மோக்ஷம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

பழமையான கோவில் என்பதையெல்லால் தாண்டி இக்கோவிலின் கலைநயத்திற்காகவே சென்று ரசித்துவிட்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com