கோயில்களில் கார்த்திகை மாத விசேஷங்கள்!

கார்த்திகை
கார்த்திகை

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலில் கார்த்திகை மாத பஞ்சமி ஸ்ரீ பஞ்சமி என்று அழைக்கப் படுகிறது. அன்று அஷ்டலட்சுமிகளுக்கும் பால் நைவேத்தியம் செய்வது வழக்கம்.

அஷ்டலட்சுமி கோயில்
அஷ்டலட்சுமி கோயில்

சோளிங்கரில் எழுந்தருளியுள்ள யோக நரசிம்மர் சுவாமியை நினைத்தாலே மன நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் யோகத்தில் இருக்கும் இந்த நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம்.

நரசிம்மர் சுவாமி
நரசிம்மர் சுவாமி

சிக்கல் சிங்காரவேலர் கோவில் வசந்த மண்டபத்தில் கார்த்திகைத் திருவிழாவின் போது தேவியருடன் சிங்காரவேலன் எழுந்தருள்வார். அப்போது நிலை கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவை புகழ்பெற்றது.

சிக்கல் சிங்காரவேலர் கோவில்
சிக்கல் சிங்காரவேலர் கோவில்

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையில் இருந்து பட்டுப்புடவை, தங்கச் சங்கிலி, மஞ்சள், குங்குமம், அன்னப்பிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன.

திருப்பதி திருச்சானூர்
திருப்பதி திருச்சானூர்

திருச்சானூர் மாடவீதிகளில் யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பிறகு தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதம் குங்குமத்தால் லட்சார்ச்சனை நடைபெறுவது சிறப்பு.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் மூலவர் 'படம் பக்கநாதர்' எனும் புற்றிடம் கொண்டார். வருடம் முழுவதும் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள் மட்டும் கவசம் இன்றி தரிசனம் தருவார்.

திருப்பரங்குன்றம் கோவில்
திருப்பரங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான், கார்த்திகை திருவிழாவில் சிறு தேரில் பவனி வருவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com