
நேபாள நாட்டில் கருட யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்தவருக்கு சுற்றினால் பாம்புக்கடி விஷம் உடனே இறங்கும்.
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பஷிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லிபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரியதிருவடி, விஜயன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும் புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வமாக கருதினார்கள்.
சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலன் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.
கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல் கோட்டை எனும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி இன்றும் வைரமுடி சேவை என்று திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மை அடுத்துள்ள து அரியக்குடி. இங்கு எழுந்தருளியுள்ளவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக்கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் குறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்கமன்னார் ஆண்டாளுடனும், கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது சிறப்பு.
குப்தர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை நாட்டிற்கு வளம் சேர்க்கும் என நம்பினர்.