

திருப்புறம்பியம் தலத்தில், சாட்சிநாதர் என்ற பெயரில் ஈசன் அருள் வழங்குகிறார். பெயர்க் காரணம் என்ன?
ஏற்கெனவே திருமணமாகிவிட்ட அரதன குப்தனுக்கு, அவனுடைய தாய்மாமன், தன் மகள் ரத்னாவளியையும் மனைவியாக்க விரும்பினான். இதனை ஏற்க மறுத்தான் மருமகன். ஆனால், ஒரே நாளில் பெற்றோர் இறந்துவிட, அனாதரவாக விடப்பட்ட ரத்னாவளிக்கு ஆதரவளிக்கும் கடமையில் அவளைத் தன் ஊருக்கு அழைத்து வந்தான்.
ஒரு வனத்தின் வழியாக வந்தபோது இருட்டிவிடவே, ஒரு வன்னி மரத்தடியில் தங்கினார்கள். அருகே ஒரு சிவலிங்கமும், ஒரு கிணறும் இருந்தன. கொண்டு வந்த கட்டுச் சோற்றை உண்டு, கிணற்று நீரை அருந்த, உண்ட மயக்கமும், பயணக் களைப்பும் சேர்ந்துகொண்டது. அதனால் அப்படியே இருவரும் உறங்கிப் போயினர்.