

'தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை' என அர்ஜுனன் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது.
"உன்னை விட என்மீது கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா?" என்று கிருஷ்ணர் கேட்டார்.
'என் மனதில் ஓடும் எந்த சிறு சிந்தயையும் உடனே கிருஷ்ணன் படித்து விடுகிறானே' என அர்ஜூனன் திடுக்கிட்டான். அவனது கர்வத்தை ஒடுக்க பகவான் முடிவு செய்தார்.
அர்ஜுனனை தன் பக்தை பிங்கலையிடம் அழைத்துச் சென்றார். மேலும் அர்ஜுனனிடம் "உன் உயிருக்கு ஆபத்து எனவே நான் பெண்ணாக மாறுகிறேன். நீ என் தோழியாக மாறிவா" என்றார்.