- ஞான குருசாளக்ராமத்தின் மகிமை பற்றிக் கூறுக...- எம்.மேகநாதன், சென்னைமகாவிஷ்ணுவின் சக்தி பெற்ற பொருட்களில் சாளக்ராமமும் ஒன்று. வாரணாசி துங்கபத்ரா, கண்டகி நதிக்கரைகளில் இந்த சாளக்ராம கற்கள் கிடைக்கின்றன. பஞ்சாயதன பூஜையை தினமும் செய்திட தீட்சை எடுத்துக் கொண்டுள்ளவர்கள் சாளக்ராமத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது அவசியம். விசிறி, வட்டம், சக்கர வடிவங்களில் இது கிடைக்கிறது. உண்மையில் இது ஒரு பூச்சி இனத்தைச் சேர்ந்தது. பச்சை, கருப்பு, மஞ்சள் மற்றும் தங்க நிறத்தில் உள்ள ஓவல், உருண்டை வடிவ சாளக்ராமத்தை சைவர்கள் சிவதீட்சை பெற்று சிவலிங்கமாக தினமும் வழிபடுவர். வைணவ சம்பிரதாயத்தில் இருப்பவர்கள் சங்கு, சக்கரம், தாமரை குறியிட்டவற்றைப் பயன்படுத்துவர்.வேதம் படித்து அனுட்டானங்களைச் செய்துவரும் அந்தணர்களில் (சைவானுட்டானத்தவர்கள் தவிர) சைவ விதிகளைக் கடைபிடித்து பூஜை செய்வர். மகாவிஷ்ணுவை வழிபட சக்கர வடிவ சாளக்ராமத்தை வைகானஸ, பாஞ்சராத்ர ஆகம விதிப்படி முத்திரை போட்டு கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள் பூஜை செய்வர். இரண்டு முறைக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் உள்ளனர்.சாளக்ராம பூஜை செய்வதால் அஸ்வமேத யாக பலனும், அன்னதானம் செய்த பலனும், நிரந்தர மகாலக்ஷ்மி வாசமும் கிட்டும் என்பது நம்பிக்கை..காய், கனிகளுக்கும் நவக்கிரஹங்களுக்கும் தொடர்பு உண்டா?- கே.தாட்சாயணி, மணிமங்கலம்நவக்கிரஹங்களின் அசைவினால்தான் மனிதர்களது வாழ்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது ஜோதிட விதிகளில் நம்பிக்கை வைத்துள்ளவர்களது கருத்து. காய், கனிகளில் குறிப்பிட்டவற்றை நாம் எடுத்துக்கொள்வதால் நவக்கிரஹ தோஷங்கள், பித்ரு தோஷங்களிலிருந்து தப்பிக்கலாம்.ராகு - கேது தசைக் காலங்களில் நலம் பெற நீர்த்தன்மை உடைய புடலங்காயை சமைத்து உண்பர். குரு தசைக் காலங்களில் மஞ்சள் சாதம், புளி அன்னம் படைப்பது சிறப்பு. சனி தசைக் காலங்களில் கருநிற கத்தரி, சூரிய தசையில் பூசணி, சந்திர தசைக் காலத்தில் மாதுளங்கனி, சுக்ரன் ஆதிக்கம் உடைய காலங்களில் முள்ளங்கி, செவ்வாய் தசைக் காலத்தில் செம்பழங்கள், புதன் தசைக் காலத்தில் அறிவு தரும் வெண்டை, கீரைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது வழக்கம். காய், கனிகளை விலக்கிவிட்டு மனிதர்கள் அதனோடு ரசாயனம் கலந்து வழங்கப்படுகிற பானங்களை அருந்தத் தொடங்கிவிட்டதால பல நோய்களுக்கு ஆளாகிறார்கள்..பெண்களின் துறவுக் கோலத்தால் மோட்சம் கிடைக்குமா?- ந.மலர்க்கொடி, திருவள்ளூர்இல்லற தர்மத்தில் கணவனோடு சேர்ந்து வாழ்ந்து புத்திரர்களைப் பெற்று இந்த உலகத்திற்கு சேவை செய்ய அனுப்புவதே புண்ணியச் செயல்தான். இதன் மூலமும் ஒரு பெண்ணுக்கு மோட்ச சாம்ராஜ்யம் கிடைக்கும். சன்னியாச யோகம் என்பது உங்கள் ஜனன ஜாதகத்தில் இருந்தால்தான் அமையும். துறவுக்கோலம் செல்வதால் இறை தரிசனம் கிடைக்கும். ஆனால், மோட்சம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு குடும்பத்திலிருந்து தனி நபராக நீங்கள் சன்னியாசம் செல்வதுசிவ தீட்சை, விஷ்ணு முத்ரா போட்டுக் கொண்டு செல்லலாம். இதுவும் 60 வயதுக்கு மேல் செல்வது நல்லது. குடும்பத்தை விட்டுச் செல்லுதல் தர்மம் ஆகாது.மகாவீரரின் போதனா மார்க்கத்தில் முப்பதாயிரம் பெண் துறவிகள் இருந்தபோதும், அவர் பிரம்மசரியத்தையே குறிப்பிட்டார். தனது ஆசிரமத்திற்குள் குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு பெண்கள் வரக்கூடாது என்றார். ‘புத்தத் தன்மையைப் பெண்கள் ஏன் ஏற்கக் கூடாது. பெண்ணாய்ப் பிறப்பதே பாவமா?’ என்று அவரது முதல் பெண் சீடர் கிருஷ்ண கெளதமி கேட்டுப் போராடிய பிறகே அவருக்கு தீட்சை கொடுத்து துறவு நிலை மேற்கொள்ளச் செய்தார் என்பது வரலாறு..வீட்டில் வாஸ்து கோளாறு இருந்தால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்படுமா?- என்.செல்வபாண்டியன், திருச்சிவாஸ்து என்பதற்கு வாஸ்தி - வசிப்பிடம் என்று பெயர். சுத்தமாக வீட்டை வைத்துக்கொள்வதே நாம் செய்யும் வாஸ்து பரிகாரங்களில் முதல்படி. கட்டிய வீட்டில் வாஸ்து கோளாறு என்பது நாம் வைக்கின்ற பொருட்களின் தன்மையைப் பொறுத்தது. பழைய, மூளியான பொருட்களை வீட்டினுள் சேர்ப்பதால் அவை, வீட்டு அறைகளை பின்னப்படுத்தி வாஸ்து குறைகளை உண்டுபண்ணுகின்றன. உதாரணமாக, உடைந்துபோன பழைய இரும்பு நாற்காலியை, ‘எங்கள் தாத்தா உட்கார்ந்தது, அதிர்ஷ்டகரமானது’ என்று பல நாட்கள் வைத்திருந்தால் அது ஒரு அறையை - மூலையைப் பின்னப்படுத்தி விடலாம். முடிந்தவரை அதுபோன்ற வஸ்துக்களை வெளியேற்றாமல் இருந்தால் நம்மை வீட்டினுள் உட்கார வைத்து விடும். ஆகவே, வாஸ்து கிருஹலட்சுமி படத்தை வாசற்படியின் உள் பகுதியில் மாட்டி வைத்து வலம்புரிச் சங்கில் துளசி நீர் விட்டுத் தெளித்து வாருங்கள். மன நலம், உடல் நலம் பாதிக்கப்படாது. ஏதாவது ஒரு இறை பிம்பத்தின் தியானத்தை தினமும் சொல்லி வருக. நலம் பெருகும்.