கிரகதோஷப் பரிகாரக் கோயில்கள் - 3: அங்காரகன் (செவ்வாய்) அருள்பாலிக்கும் வைத்தீஸ்வரன் கோயில்!

வைத்தீஸ்வரன் கோயில் (Vaitheeswaran Temple) தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
Vaitheeswaran Temple - Kiragathosa parihara kovilgal
Vaitheeswaran Temple
Updated on
deepam strip
Deepam

தீராத நோய்கள் அனைத்தையும் தீர்த்தருளும் பொருட்டு மந்திரமும், தந்திரமும், மருந்துமாகி, வைத்தியநாதன் என்ற பெயருடன் சிவலிங்க வடிவில் இறைவன் எழுந்தருளியிருக்கும் தலத்திற்குப் புள்ளிருக்குவேளூர் என்று பெயர். சீர்காழியிலிருந்து 7 கி.மீ.

ஜடாயு என்னும் புள், ‘இருக்கு‘ என்ற ரிக் வேதம், வேள் என்னும் முருகன் ஆகிய மூவரும் இந்த இறைவனைப் பூசித்த ஊர், அதனாலேயே புள் + இருக்கு + வேள் + ஊர் சேர்த்து புள்ளிருக்குவேளூர் என்றானது. இப்போது வைத்தீஸ்வரன் கோயில் என்று கொண்டாடப்படுகிறது.

இறைவன் வைத்தியநாதன், நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு நோய்களையும் தீர்த்து அருளக்கூடியவர். உடன் விளங்கும் அம்பிகையான தையல்நாயகி, தைல பாத்திரமும், சஞ்சீவியும், வில்வமரத்து அடிமண்ணும் எடுத்து வந்து, இறைவனுக்கு உறுதுணையாக அமைந்து, பக்தர்களைப் பரிபாலிக்கிறாள்.

இம்மையில் போகங்களையும், மறுமையில் மோட்சத்தையும் அளிப்பவர் இந்த வைத்தியநாத சுவாமி.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com